திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கில் இரு தரப்பினரும் சமரசம்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி அழைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு இன்று (25) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆரச்சி முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பிரதிவாதியான திஸ்ஸ அத்தநாயக்க சார்ப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ, வழக்கை முடித்துக் கொள்வது தொடர்பில் இரு தரப்பினரும் சமரசம் அடைந்துள்ளதாக நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

அதன் அறிக்கையை சமர்பிப்பதற்கான காலத்தை வழக்குமாறும் அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் குறித்த வழக்கை ஏப்ரல் 4 ஆம் திகதி அழைக்க உள்ளதாகவும் அன்றைய தினம் சமரச அறிக்கையை சமர்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி காலத்தில் தவறான ஆவணம் ஒன்றை தயாரித்து, அதனை ஊடகங்களுக்கு வெளியிட்டமை தொடர்பில், திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb