5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சையை ரத்துச் செய்ய தீர்மானம் – ஜனாதிபதி

5ஆம் தர புலமை பரிசில் பரீட்சையை ரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை , போதைப்பொருள் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை ஏப்ரல் 3 ஆம் திகதி முதல் மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹிங்குரக்கொட ஆனந்த மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

இதற்காக முப்படையினரும் காவற்துறையினரும் இணைந்து மிகவும் பலமான முறையில் இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb