வெளிநாடுகளிடம் இருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களை பயன்படுத்துவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

வெளிநாடுகளிடம் இருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களை பயன்படுத்துவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

வெளிவிவகார அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களுக்கான பாதீட்டு ஒதுக்கங்கள் மீதான குழு நிலை விவாதம் இன்று நாடாளுமன்றில் நடைபெற்றது.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், இன்றைய நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் வைத்து இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதேவேளை, ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தமிழ் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லாதது என்று நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா குறிப்பிட்டார்.

இதற்கிடையில், தாங்களும் குற்றவாளிகளாக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தினாலேயே பலர் ஜெனீவா பிரேரணைக்கு எதிராக கூச்சல் எழுப்புதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா குற்றம் சுமத்தினார்.

இதேவேளை, அண்மையில் மன்னார் – திருக்கேதீஷ்வரம் ஆலயத்துக்கு முன்னால் இடம்பெற்ற மதவாத செயற்பாடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஷ்கந்தராஜா வலியுறுத்தினார்.

Share:

Author: theneeweb