மலையகத்தை வாட்டி வதைக்கும் வறட்சி – குடி நீருக்கும் தட்டுப்பாடு

மத்திய மலைநாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக நீரோடைகள் மற்றும் நீர் ஊற்றுக்கள் அனைத்தும் வற்றியுள்ளன.

இந்நிலையில், மவுஸ்ஸாகலை, காசல்ரீ, கெனியன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, மற்றும் மேல்கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் பாரியளவில் குறைவடைந்துள்ளது.

மவுஸ்ஸாகலை நீரத்தேக்கத்தின் நீர் மட்டமானது 66 அடியாகவும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 48 அடியாகவும், மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 34 அடியாகவும் குறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனால், நீர் மின் உற்பத்தி குறைவடைந்துள்ள நிலையில், நாடாளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்சாரத் தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கடும் வரட்சி நிலவுவதால் மேலும் நீர் மட்டம் குறைய வாய்ப்புள்ளதுடன், மேலும் வரட்சியான காலநிலை தொடரக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வறட்சி காலநிலையால் குடிநீருக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

Share:

Author: theneeweb