கிளிநொச்சியில் வடக்கு மாகாண ஆளுநரின் பொது மக்கள் சந்திப்பு

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் பொது மக்கள் சந்திப்பு இன்று(27) இடம்பெற்றது.
மாவட்டங்கள் தோறும்  பொது மக்கள் சந்திப்பு நிகழ்வை நடத்தி வரும் வடக்கு மாகாண ஆளுநர் இனறு(27) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திலும் பொது மக்கள் சந்திப்பை மேற்கொண்டார்.
இதன் போது  பல பொது மக்கள் கலந்துகொண்டு தங்களின்  பிரச்சினைகளை ஆளுநரின் கவனத்திற்குகொண்டு  சென்றனர். இதில் அதிகளவான காணிப் பிணக்குகள் காணப்பட்டன. அதிலும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிப் பிணக்கள் அதிகம்  காணப்பட்டன.
 இதன் போது வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன்,  வடக்கு மாகாண கல்வி,சுகாதாரம், விவசாயம், மகளீர் விவகாரம், உள்ளுராட்சி, அமைச்சின் செயலாளர்கள் வடக்கு மாகாண காணி ஆணையாளர், உள்ளுராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்தகொண்டிருந்தனர.
Share:

Author: theneeweb