தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி

தோட்டத்தொழிலாளர்களுக்கு மேலதிகமாக 50 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த கொடுப்பனவு 750 ரூபா வரையில் அதிகரிப்பதற்கு ஊழிய தொழிற்சங்கம் மற்றும் பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்களுக்கிடையில் உடன்பாடு ஏற்படுத்திகொள்ளப்பட்டுள்ளது.

இதில் சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லை என பெருந்தோட்டத்துறையின் சிரமமான நிலை ஏற்பட்டிருப்பதுடன் இது தொடர்பாக முன்வந்துள்ள பிரதிநிதிகளை கவனத்தில் கொண்டு தோட்டத்தொழிலாளர்களுக்காக நிவாரணம் வழங்கும் வகையில் பிரதேச நிறுவன தோட்ட சேவையாளர்களுக்காக தற்பொழுது உடன்பட்டுள்ள நாளாந்த கொடுப்பனவுக்கு மேலதிகமாக மேலும் 50 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காக பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் நவீன் திஸ்ஸாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share:

Author: theneeweb