யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் நெருக்கடி

டிலாந்தி ஜயமான்ன   —-

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் தாதிமார்களின் பற்றாக்குறையினால் பொதுவான ஒரு நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகிறது.

வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தது, வைத்தியசாலைக்கு நியமனம் செய்யப்பட்ட தாதிமார்களில் பெரும்பாலானோர் நாட்டின் தென் பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களில் தங்கள் மூன்று வருட சேவையை முழுதாக இந்த வைத்தியசாலையில் நிறைவு செய்தவர்களைத் திரும்பவும் தென்பகுதிக்கே மாற்றம் செய்து விட்டனர் என்று.

சேவையில் மூத்த தாதிமார்களை நியமனம் செய்வதற்கும் அதேபோல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். தற்சமயம் முதல் நியமனம் பெறுபவர்கள் மட்டுமே யாழ்ப்பாணம் வருகிறார்கள். நியமனங்கள் சுழற்சி அடிப்படையில் வழங்கப்படவேண்டும், அப்படிச் செய்தால் வைத்தியசாலை இளநிலை உத்தியோகத்தர்களை மட்டும் பெற்றுக் கொள்ளாது.

அவர் அவதானித்த மற்றொரு பிரச்சினை வட மாகாணத்தில் இருந்து விண்ணப்பிக்கும் தாதியர் வேட்பாளர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாக இருப்பது. யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் இரண்டு தாதியர் பாடசாலைகள் இருந்தபோதும் அதற்கு மாறக மிகவும் சிறிதளவான விண்ணப்பதாரிகளே தாதியர் பணிக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

அவர் மேலும் அவதானித்தது, 30 வருடங்களாக இடம் பெற்ற மோதல்களினாலும் மற்றும் பெற்றோர்கள் தங்கள் மகள்மாரைத் தாதியர் பணிக்கு அனுப்ப விரும்பாததாலும், இந்த இரண்டு தாதியர் பயிற்சிப் பாடசாலைகளும் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது என்பதை.

எனினும் சுகாதார அமைச்சு தாதியர் பட்டதாரிகளை தென் பகுதியில் இருந்து தொடர்ந்து அனுப்பி வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரி வட்டாரங்களைத் தொடர்பு கொண்டபோது, ஒரு கலாச்சார பின்னடைவே இந்தச் சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளது என்று தெரிவித்தார்கள். “வடக்கிலுள்ள பெரும்பாலான தமிழ்க் குடும்பங்கள் தங்கள் மகள்மார் விசேடமாக கல்யாண வயதில் உள்ளவர்கள் இரவுக் கடமைக்குச் செல்வதை விரும்பவில்லை, ஏனென்றால் அது பின்னர் அவர்களின் குடும்ப வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் நம்புவதுதான். எனினும் இந்தப் போக்கு படிப்படியாக மாறி வருகிறது” என்று அவர்கள் தெரிவித்தார்கள். அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தது, இளம் பெண்கள் பாரா மெடிகல் எனப்படும் மருத்துவதுறை சார்ந்த உதவியாளர் படிப்பை மேற்கொள்வதில் பெரும் பாராபட்சம் நிலவுகிறது என்று. எப்படியாயினும் ஆண் தாதிமார்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு வடமாகாண வைத்தியசாலைகளில் உள்ள தாதிமார் பற்றாக்குறையை சந்திப்பதற்காக அரசாங்கம், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் தோற்றிய மாணவர்களுக்கு தாதிமார் பயிற்சிக் கல்லூரிக் கதவுகளை திறந்துவிட முயன்றது, ஏனென்றால் அந்த மாகாணத்தின் கல்வித் தரத்தை அங்கு நடைபெற்ற போர் பாதிப்படைய வைத்தது, அந்த மாகாணத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள போர் நடைபெற்ற காலத்தில் சரியான பாடத் தரங்களுடன் இணைந்து செயற்பட முடியாத காரணத்தால் க.பொ.த (உயர்தர) பரீட்சைக்கு விஞ்ஞ}னப் பிரிவு பாடங்களைப் பின்பற்றவில்லை.

அந்த நேரத்தில் அரசாங்கம் சொன்னது நாட்டின் வட பகுதியில் மட்டும் சேவை புரிவதற்கு கலைப் பிரிவில் கல்வி பயின்றவர்களை தாதியர்களாக நியமிப்பதைத் தவிர அதற்கு வேறு தெரிவு இல்லை என்று. அந்த நேரத்தில் வட பகுதி வைத்தியசாலைகளில் மட்டும் பணியாற்றுவதற்கு அவர்களை நியமிக்கவுள்ளதாக அரசாங்கம் உறுதிமொழி வழங்கியது.

எனினும் அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கம் (ஜி.என்.ஓ.ஏ) அப்போது அந்த நகர்வைக் கடுமையாக எதிர்த்தது. மார்ச் 21ல் கருத்துக் கேட்பதற்காக அந்தச் சங்கத்தின் தலைவரைத் தொடர்பு கொண்டபோது, அதன் தலைவரான சமன் ரட்னப்பிரிய தற்போது 100 தாதியர் பட்டதாரிகள் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையிலும் மற்றும் வடக்கிலுள்ள இதர வைத்தியசாலைகளிலும் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனக் குறிப்பிட்டார்.

ரட்னப்பிரிய தெரிவித்தது, இந்தப் பிரச்சினை வைத்தியசாலைகளிலும் மற்றும் வடக்கு மாகாணசபையிலும் தங்கியுள்ளது, அவை தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவைக்கு தமக்குத் தேவையான பணிநிலைப் பட்டியலைச் சமர்ப்பிக்கவில்லை. சில விடயங்களில் 2015ம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டியலுக்கு அமைவாகவே பணிநிலைப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுவும் கூட சரியாகப் புதுப்பிக்கப் படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb