அரசாங்கத்திற்கு எதிரான இரு வாக்கெடுப்புகள் தோல்வி

உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு, குழுநிலை விவாத வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளது.

அதற்கு எதிராக 38 வாக்குகளும் ஆதரவாக 20 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளது.

அதனடிப்படையில் உள்ளூராட்சிகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மீதான வாக்கெடுப்பு 18 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

இதேவேளை, பெருநகரங்கள், மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடும் குழுநிலை விவாத வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளது.

அதற்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிராக 38 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளது.

அத்துடன் இன்றைய தினம் தோல்வியடைந்த நிதி ஒதுக்கீடுகளை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb