பிரிவினைவாதப் பதிவுகளைத் தடை செய்யும் பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகியவற்றில் வெள்ளையினத் தேசியவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் வகையிலான பதிவுகளை அடுத்தவாரம் முதல் தடை செய்யவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பயங்கரவாதக் குழுக்கள் பகிரும் தகவல்களை அடையாளம் கண்டு அவற்றைத் தடை செய்யும் திறனை மேம்படுத்த இருப்பதாகவும் பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் நியூஸிலாந்தில் நடத்தப்பட்ட பள்ளிவாசல் தாக்குதல்களை குறித்த தாக்குதல்தாரி பேஸ்புக்கில் நேரலையாக ஔிபரப்பியதன் பின்னர், சமூக வலைத்தளங்களுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb