வறுமையில் முன்னணியில் இருந்த கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை வெள்ளம் மீண்டும் துன்பப்படுத்தியுள்ளது –ரணில்

 

வறுமையில் முன்னணியில் இருந்த கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை வெள்ளம் மீண்டும் துன்பப்படுத்தியுள்ளது என இலங்கை நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்  

அண்மையில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளதுஅந்தவகையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட  முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி  மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் இலங்கை நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிளிநொச்சி  மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது

இங்கு கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் இன்றைய நாள் இங்கு கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள் கடந்த வாரத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்ப்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக சுமார் 38 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன விவசாயம் மற்றும் சிறு வர்த்தகங்கள் சுயதொழில்கள்  பாதிக்கப்பட்டுள்ளன    கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் பொருளாதார நிலையில் பின்னணியில்  உள்ள இரண்டு மாவட்டங்களாகும் அதனால் இந்த வெள்ள பாதிப்பு என்பது அவர்களை  மிகவும் பாதித்துள்ளது எனவே இவர்களுக்கான உதவிகளை வழங்கி அபிவிருத்தியை மீண்டும்  ஆரம்பிக்க எதிர்பாக்கிறோம்

முதலாவதாக இந்த பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாத்து அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்ப்படுத்திய இரண்டு மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்கள் அதிகாரிகள் முப்படையினர் போலீசார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மத தலைவர்கள் மற்றும் உதவிகளை வழங்கியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அரசாங்கள் என்ற அடிப்படையில் நன்றி தெரிவிக்கிறேன்

இவர்கள் அனைவரது பங்களிப்பினாலும் பல உயிரிழப்புக்கள் இல்லாது உயிர்களை பாதுகாக்க கூடியதாக இருந்தது 23 ம் திகதி மாவட்ட அதிகாரிகள் கூட்டம் ஒன்றை நடத்தினர் 24 ம் திகதி அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் இந்த பகுதி அரசியல் வாதிகள்  உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டம் ஒன்றை நடாத்தி நிலைமைகளை ஆராய்ந்தனர் மத்திய அரசில் இருந்தும் இது தொடர்பில் தமது சேவைகளை வழங்கினர் இப்போது உதவிகள் அரசாங்கம் மூலமும் ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமும் கிடைக்கப்பெறுகின்றன வெள்ளம் தொடர்பான ஆபத்து இன்னும் குறையவில்லை ஆகவே நாம் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும் இரண்டு வாரங்களுக்குள் வெள்ளத்தால் வீடுகள் பாதிக்கப்பட்ட அனைத்து  குடும்பங்களுக்கான பத்தாயிரம் ரூபா வழங்கப்படும் அதனை விட தரப்பாள் மற்றும் கூரைத்தகடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் அதனை விட சுகாதாரம் தொடர்பிலும் கவனம் செலுத்துகிறோம் அதனைவிட சில மாதங்களுக்கு நுண்கடன் சேகரிப்பவர்களை தடை செய்கிறோம் அதேபோன்று வங்கி கொட்டுப்பனவுகள் தொடர்பிலும் ஆராய்கிறோம்  விசேடமாக நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்குகிறோம் பிரதேச சபையினரும் இராணுவத்தினரும் இணைந்து சேவையாற்ற

விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கால்நடைகள் இறந்துள்ளன வியாபார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது இவற்றை கட்டியெழுப்ப உதவவுள்ளோம் வீடு மற்றும் சொத்திளப்புக்களுக்கு காப்புறுதியூடாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் அதனைவிட பிரதான பிரச்சனையாக வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளது இதற்க்கு பிரதேச சபைகள் ஊடாக மதிப்பீடுகள் பெற்று அவற்றை பிரதேச சபையுடன் இணைந்து  நடைமுறைப்படுத்துவோம்    

இதனைவிட வீட்டு அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் உள்ளிட்டவர்கள் இங்கு வருகின்றனர் ஏனையவர்கலும்  வருவார்கள்  விவசாய அமைச்சரையும் நான் சந்திப்பேன் அவரை  இங்கு அனுப்புகிறேன் அதனைவிட எனது அமைச்சின் செயலாளரும் இடையிடையே  இங்கு வருவார் கொழும்பிலும் இதுதொடர்பில் அமைச்சர்களுடன் கலந்துரையாடுவோம் எனவே இன்று இங்கு வருகைதந்த அனைவருக்கும் நன்றிகள் என்றார் 

-S.THAVASEELAN-

    (MULLAITIVU )
      0777782259
Share:

Author: theneeweb