போதைப்பொருட்களை முற்றுமுழுதாக அழிக்க வேண்டும் – ஜனாதிபதி

பாதுகாப்பு தரப்பினரால் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் நிறைவுறுத்தப்பட்ட போதைப் பொருட்களை அழிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதி ஊடகங்கள் முன்பாக அவற்றை அழிக்குமாறு ஜனாதிபதி தமது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலானது இன்று மிகவும் அபாயகரமான நிலையை அடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

போதைபொருள் சமூகத்தை சீரழித்து வருவதுடன் எதிர்கால சந்ததியினருக்காக அதனை தடுக்கும் பொறுப்பினை நிறைவேற்றுவதில் அனைவரும் தாமதமின்றி ஒன்றிணைய வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

போதைப்பொருட்களை முற்றுமுழுதாக சமூகத்திலிருந்து இல்லாதொழிக்க முடியாது.

எனினும் அது துரிதமாக பரவிச் செல்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் சமயம் சார்ந்த நிகழ்ச்சித்திட்டங்களும் இன்றியமையாதவை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb