முல்லைத்தீவில் அதிகளவான மாணவர்கள் 9 ‘ஏ’ சித்தி

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லை கல்வி வலயத்தில் 9 பாடசாலைகளில் 9 ஏ சித்தி பெற்ற மாணவர்களின் விபரங்களை முல்லை வலயக்கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் ஏழு மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திபெற்றுள்ளதுடன் விசுவமடு மாகாவித்தியாலயத்தில் இரண்டு மாணவர்களும்,வித்தியானந்தா கல்லூரியில் மூன்று மாணவர்களும்,குமுழமுனை மகாவித்தியாலயத்தில் இரண்டு மாணவர்களும், முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இரண்டு மாணவர்களும், செம்மலை மகாவித்தியாலயத்தில் ஒரு மாணவரும், இரணைப்பாலை றோமன்கத்தோலிக்க வித்தியாலயத்தில் ஒரு மாணவனும், முள்ளியவளை கலைமகள் வித்தியாலத்தில் ஒருமாணவனும்,சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் ஒரு மாணவனுமாக முல்லைத்தீவு வலயத்தில் 20 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ தர  சித்திகளை பெற்றுள்ளதாக முல்லை வலயக்கல்விப்பணிமனை அறிவித்துள்ளது.

Share:

Author: theneeweb