ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

ஒரு தொகை கேரளா கஞ்சாவை கெப் வண்டியில் எடுத்துச் சென்று கொண்டிருக்கும் போது நான்கு சந்தேகநபர்கள் மன்னார் பெருக்களம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் மன்னார் முகாம் அதிகாரிகளும் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபா பெறுமதியான 01 கிலோவும், 800 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கூறியுள்ளனர்.

Share:

Author: theneeweb