வறட்சியான காலநிலையினால், நாட்டின் பல பிரதேசங்களுக்கான நீரை விநியோகிப்பதில் நெருக்கடி

நிலவும் வறட்சியான காலநிலையினால், நாட்டின் பல பிரதேசங்களுக்கான நீரை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்து செல்வதன் காரணத்தினால் மின்னுட்பத்தியும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று முற்பகல் 9 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படுத்தப்படுகிறது.
இதற்கமைய, கொழும்பு, தெஹிவளை – கல்கிசை, கோட்டே, கடுவலை மாநகர சபை மற்றும் அதன் நிர்வாக எல்லை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபை மற்றும் அதன் நிர்வாக எல்லை ஆகிய பகுதிகளில் இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபை மற்றும் அதன் நிர்வாக எல்லை பகுதி ரத்மலானை மற்றும் சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படுவதாக, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
Share:

Author: theneeweb