கேகாலையில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் டி லக்ஷிகா எனும் மாணவி சாதனை

கேகாலை சாந்த மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தின், வரலாற்றில் முதன் முறையாக க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

டி லக்ஷிகா எனும் மாணவியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவி 09 பாடங்களிலும் ஏ சித்தியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 55 வருட பாடசாலை வரலாற்றில் சகல பாடங்களிலும் ஏ சித்தியை மாணவி ஒருவர் பெற்றுள்ளமை இதுவே முதன் முறையாகும்.

குறித்த பாடசாலையில் 35 மாணவர்கள் வரையில் உயர் தரத்திற்கான தகுதியினை பெற்றள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb