கூட்டமைப்பை ரணில் ஏமாற்றுகிறார் – காமினி லொக்குகே

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் தீர்வு பெற்றுத்தருவதாக குறிப்பிட்டுக் கொண்டு கூட்டமைப்பினரை ஏமாற்றுகின்றார் என  பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீண்டும்  இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் அரசியல் தீர்வினை அனுமதிக்க முடியாது. இவ்விடயத்தில்  நாங்கள் உறுதியாக உள்ளோம்.

வடக்கு மற்றும் கிழக்கிற்கு அபிவிருத்திகளை முன்னெடுக்கும் விடயங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.  பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் தீர்வு பெற்றுத்தருவதாக குறிப்பிட்டுக் கொண்டு கூட்டமைப்பினரை ஏமாற்றுகின்றார். கூட்டமைப்பினர்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு போலியான   வாக்குறுதிகள் வழங்கி தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி தமது அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்கின்றார்கள்.

வரவு- செலவு திட்டத்தை எம்மால் தோற்கடிக்க முடியாது  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவே செயற்படுவார்கள்.     இவர்கள் ஒரு சில விடயங்களை மாத்திரம் முன்னிலைப்படுத்தி  அரசாங்கத்திற்கு ஆதரவு  வழங்குவதால்  பாரிய நெருக்கடிகள்  ஏற்படும்.  வடக்கு மக்களுக்கும் எவ்வித  நலன்களையும் தராத  விடயங்கள் வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.  இவ்விடயம் தொடர்பில்  கூட்டமைப்பினர் கருத்துரைக்காமல் அரசியல் தீர்வு விடயத்தில் மாத்திரம் கவனம் செலுத்துகின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb