நெருக்கடி இன்னமும் முடியவில்லை

—-ராஜபக்ஸ பிரேமரத்ன —

ஜனநாயகம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது என்கிற ஒரு தலைப்புச்செய்தியுடன் மட்டும் நாம் பெருமைப்பட முடியாது. நாங்கள் ஒரு முக்கியமான ஜனநாயகமற்ற செயற்பாட்டைப் பெற்றிருந்தோம் என்பது உண்மை மற்றும் அந்தச் செயற்பாடு சரியான நிலைக்கு மீட்டெடுக்கப்பட்டது என்கிற காரணம் நிச்சயமாக பெருமைப்படக் கூடியதே. இதுவரை நாம் எதிர்கொள்ள நேரிட்டவைகளைப் பற்றி நாம் கண்டது மற்றும் எதிர்பார்த்தது எல்லாமே வெறும் ஆரம்பம் மட்டுமே. அனைத்தையும் கணக்குக்கூட்டிப் பார்க்கும்போது இந்தச் சரித்திரம் இன்னும் சில காலத்துக்கு தொடரும் சாத்தியம் உள்ளது. எனினும் அது அனைத்துக் குடிமக்களுக்கும் துரோகமாகவோ அல்லது மனக்கவலை தருவதாகவோ இல்லாமலும் இருக்கலாம். இந்த செயற்பாட்டின் மூலம் எங்களுக்கு நம்பிக்கையுடன் இருப்பதற்கான சில நிலைப்பாடுகள் உதயமாகியுள்ளன. அவற்றைப் பற்றி நாம் பின்னர் விவாதிப்போம்.

ஸ்ரீலங்கா அரசியலில் தற்போது உள்ள ஐந்து கட்டளைகளைக் கவனியுங்கள். அவைகள் மாற்றப்படாவிட்டால் மற்றும் மக்கள் அவற்றின் உண்மையான அத்தத்தை புரிந்து கொள்ளாவிட்டால், அதிகாரம் ஒரு குழுவில் இருந்து இன்னொரு குழுவுக்கு பரிமாற்றப்படுவதை தவிர வேறு எதுவும் நடக்காது. நீங்கள் அவைகளை அடையாளம் கண்டுகொள்வீர்களா? நிச்சயமாக அவை மற்றவைகளில் சிலவே ஆனால் இவைகள் தான் முக்கியமானவைகள்.

ஜனநாயகம் ஸ்ரீ ‘என் வழி உயர்ந்த வழி’ – அதிகம் சக்திவாய்ந்த மனிதர்கள் மற்றவர்களை தங்களது உயர்ந்த வழியினைப் பின்பற்ற வைக்கிறார்கள்.

நீதித்துறை ஸ்ரீ ‘எனது வழியினை நியாயகரிக்கும்’ – முன்பு செய்யப்பட்ட முடிவுகளை சரிபார்ப்பதற்கு கிடைத்துள்ள பொறிமுறையாகக் கருதலாம்.

மதம் ஸ்ரீ ‘குருட்டுத்தனமான செயல்’ – புராணங்கள் மற்றும் விரோதம் ஊடாக மக்களை மூளைச்சலவை செய்வதற்கு பயன்படுத்தப்படும் முறையான செயல்பாடு.

தேசியவாதம் ஸ்ரீ ‘இனவாதம்’ – பயம் எனும் மனோபாவம் மூலம் வெளிப்படைத்தன்மை குறைவாக உள்ள மக்களை தூண்டிவிடும் செயல்முறை.

நவீனமயமாக்கல் ஸ்ரீ ‘வெளிநாட்டு குறுக்கீடு’ – புதிய உலகத்தை மக்கள் தழுவுவதை தடுக்கும் சொல்லாட்சி.

இந்தப் பதாகைகளின் கீழ் நடத்தப்படும் செயற்பாடுகள் பொது ஜனங்களை குறிப்பாக நகர்ப்புறங்கள் அல்லாத பகுதிகளைச் சேர்ந்தவர்களை வெற்றிகரமாகக் கையாளப் பயன்படுபவைகள் ஆகும். பாராளுமன்ற அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுக்க முக்கியமாக வெகுஜனங்கள் தேர்ந்தெடுக்கும் செயல்முறை இதுதான். மேற்குறிப்பிட்ட பதாகைகள் ஏதாவது ஒன்றின் கீழ் செயற்பட பெரும் கூட்டத்தைக் கவர்ந்திழுக்கும் ஈர்ப்பானது அவை சமூகத்தில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவு மற்றும்; ஊடுருவுதல் என்பனவற்றை நிருபணமாக்கும் உறுதியான சான்றுகள் ஆகும்.

பிரச்சினைகளை அடையாளம் காணுதல் மற்றும்அவற்றுக்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிதல், என்பனவற்றுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகள் அபிவிருத்தி செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப் பட்டாலன்றி, அவற்றை இனங்காண்பது இயலாத ஒன்றாகும். இதற்கான செயல்பாடு நகரங்களில.; இருந்து அடிப்படை மட்டத்தில் நாட்டின் தூர இடங்களுக்கு நகர்த்தப்பட வேண்டும். இந்தப் பிரச்சினை நகரங்கள் அல்லாத இடங்களில் வாழும் மக்களைச் சென்றடைவதற்குரிய நம்பிக்கையானதும் மற்றும் திறமையானதுமான தொடர்பு சேவைகள் இல்லாத காரணத்தால் சிக்கலுக்குள்ளாகியுள்ளது ஏனென்றால் முக்கியமான நீரோட்டத்தில் உள்ள தொடர்பு சேவைகள் மேற்குறிப்பிட்ட ஐந்து கட்டளைகளையும் மேம்படுத்துபவர்களுடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதே முக்கிய காரணங்கள் ஆகும்.

 

ஒக்ரோபர் 26க்குப் பின்னுள்ள நடவடிக்கைகள் அநேகமான நேர் விளைவுகளை ஏற்படுத்தி இருப்பதுடன் சில நம்பிக்கைகளையும் விதைத்துள்ளது. • முன்னெப்போதையும் விட சிறிய அரசியற் கட்சிகள் அழுத்தங்கள் மற்றும் சூழ்ச்சிகள் இடம்பெற்றபோதிலும் சரியான திசையை வழங்கி அதை வழிநடத்துவதற்கு ஏற்ற மிகவும் தீர்க்கமான தலைமைத்துவ பங்கினை வகித்திருந்தன. வலிமையானதும் மற்றும் நம்பிக்கையானதுமான ஒரு மூன்றாவது சக்தி நாட்டில் இல்லாததால் நாங்கள் கண்ட இந்த தலைமைத்துவ நடவடிக்கைகள் நம்பிக்கையளிப்பதாக உள்ளது.

• பல்வேறு சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் இந்தப் பிரச்சினையை திறமையாக பிரதானப்படுத்துவதற்கு அணி திரண்டிருந்ததுடன் மற்றும் இந்தப் பிரச்சினை ஒரு தீர்க்கமான முடிவினை அடைவதற்கு உறுதி காண்பித்தார்கள். அவர்கள் செயற்படுத்திய செயல்முறைகளும் தொடர்பாடல் வழிகளும் புதமையானதாக இருந்தன மற்றும் அநேக பெண்கள் குழுக்களின் ஈடுபாடு சக்தியானதாகவும் மற்றும் ஊக்கமூட்டுவதாகவும் இருந்தது.

• உச்ச நீதிமன்றத்தினால் காட்டப்பட்ட தொழில் திறமை, நம்பகத்தன்மை மற்றும் தைரியம் என்பன பலரின் எதிர்பார்ப்புகளையும் விஞ்சியதாக இருந்தது. பல வருடங்களாக நீதித்துறையின் சுதந்திரம் ஒரு கேள்விக்குறியாகவே இருந்தது, தலைமை நீதியரசரின் தலைமைத்துவத்தின் கீழான உச்ச நீதிமன்றம் ஸ்ரீலங்காவை பெருமை கொள்ள வைத்துள்ளதுடன் மற்றும் ஏனைய நீதிபதிகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இந்தப் பதவிகளுக்கு சரியான நபர்கள் நியமிக்கப்பட்டால் தங்களால் நேர்மையாக நிற்கமுடியும் என்று அவர்கள் காண்பித்துள்ளார்கள். உலகெங்கிலுமுள்ள பத்திரிகைகள் மற்றும் சகோதர சட்டத்துறையினரால் அவர்கள் போற்றப்பட்டுள்ளார்கள்.
• தனது அனைத்து அரசியல் அனுபவங்கள் (சில பழைய வடுக்களைத் தவிர) மற்றும் துணிவு என்பனவற்றை ஒன்று சேர்த்து சபாநாயகரும் கூட விஷயங்கள் சிக்கலானபோது ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளார். அவரது துணிவு மற்றும் விவேகம் என்பனவற்றுக்கு நன்றி, தாங்கள் தெரிவு செய்த கீழ்த்தரமான மனிதர்கள் அவர்களை ஒரு போதும் அனுப்பக்கூடாத ஒரு இடத்தில் அனுப்பியதற்காக எவ்வளவு மோசமாக நடந்துகொண்டார்கள் என்பதைக் காண்பதற்கு நாட்டு மக்களுக்கு ஒரு நேரடியான வாய்ப்பு கிடைத்துள்ளது.

• பிரதான நீரோட்டத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் சரியான தகவல்களை மக்கள் அறிந்து கொள்வதை நிராகரித்து சுயமாக ஒரு செலுத்துதலை அமல் படுத்திய வேளையில் இணைய செய்திகள், இணையப் பத்திரிகைகள் சமூக ஊடகக் குழுக்கள் போன்ற இணையத்தள சேவைகள் ஒரு சிறப்பான சேவையை ஆற்றியிருந்தன. அநேகமாக அதன் காரணமாக அசிங்கமான பாராளுமன்ற உறுப்பினர்களின் வியாபாரம் நிறுத்தப்பட நேரிட்டது. நிச்சயமாக அவற்றைப் புறக்கணித்தவர்களுக்கு முடிவு விளைவு நம்பிக்கையை தந்திருக்கும் குறைந்தபட்சம் இப்போது அவர்கள் ஆர்வமாக இருப்பார்கள். மறுபுறத்தில் உலக தொடர்பாடல்கள் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களில் ஒன்றாக விளங்கின, ஸ்ரீலங்காவாசிகள் இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை இழக்க நேரிட்டது மன்னிக்க முடியாதது.

• சில சாத்தியமான காரணங்களை அலட்சியப்படுத்த முடியாது, அயலவர்கள் உட்பட சர்வதேச சமூகம் ஆற்றிய பங்களிப்பு மன உறுதியளிப்பதாக உள்ளது. நல்ல விஷயங்கள் மற்றும் நல்லவர்களைப் பயன்படுத்தி இந்த வெற்றிகளை நாம் ஏன் கட்டியெழுப்பக்கூடாது? நாங்கள் வித்தியாசமாகச் சிந்தித்து சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தொடங்காவிட்டால் மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள், அவர்களின் நம்பிக்கையை வெல்வது உறுதியான முடிவுகளை மேற்கொள்ள அவசியமானது. கீழே காணப்படும் செயற்பாடுகளை கருத்தில் கொள்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள். மேலே அடையாளம் காணப்பட்ட குழுவினை வழிநடத்த இதனால் முடியும்.

• வாராந்தர அடிப்படையில் சிறப்பு நீதிமன்ற வழக்குகளின் முன்னேற்றத்தை பின்தொடர்வதற்கு ஒரு பாராளுமன்றக் குழுவை அமைத்தல். இந்த வழியில் பொதுமக்கள் நீதிமன்ற நடவடிக்கைகள், சட்டங்கள் என்பனவற்றை பின்தொடர்ந்து உண்மையை அறிந்து கொள்வதுடன் அவற்றுக்கான ஒரு முடிவையும் காணலாம்.

• பெரிய அளவிலான பிரச்சினைகள் பற்றிய குற்றங்களுக்கான விசாரணைகளை விரைவு படுத்த கோரிக்கை வவைப்பதுடன் மற்றும் அதேபோல அவற்றை பாராளுமன்றத்திலும் பின்தொடர்தல். இது தற்போது பாராளுமன்றில் உள்ள அங்கத்தவர்களின் குற்றச்சாட்டுகளையும் கண்காணிக்க உதவும்.

• அனைத்து 500 ரூபா நோட்டுகளையும் செல்லுபடியற்றதாக்கி புதிய நோட்டுகளை வழங்க அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும்.

• 50 மில்லியன் ரூபாவுக்கு (அல்லது வேறு ஏதாவது நடைமுறை எண்ணிக்கை) அதிகமான தொகை உள்ள வங்கிக் கணக்குகளை இடைநிறுத்தி, இந்தப் பணம் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பதற்கு எழுத்துமூலமான விளக்கத்தைப் பெற்றுக்கொண்ட பின்னரே அதை விடுவிக்க வேண்டும்.

• ஸ்ரீலங்காவில் உள்ள 30 மில்லியனுக்கும் அதிகமான கைபேசி பாவனையாளர்களும் தொடர்பாடல் தளங்களை நேரடியாக அணுகும் வகையில் நேரடியாக இலவசமாகப் பதிவிறக்கம் செய்யக்கூடியதான ஒரு பயன்பாட்டு முறையை உருவாக்க வேண்டும். இந்த செயற்பாடு மூலமாக பொதுமக்கள் தொடர்பாடல் மேற்கொள்ளக்கூடிய ஹொட் லைன்ஃபோர்ட்டல்கள் என்பனவற்றை உருவாக்கி நடைவெறும் எந்தவொரு தவறான செயல்கள் பற்றிய படங்கள் ஃவீடியோஃஓடியோ போன்றவற்றை பதிவேற்ற முடியும். நாட்டின் விதியை தங்களது ஒரு வாக்கினால் இறுதியாக முடிவு செய்யும் நகரத்தில் வசிக்காத மக்களுக்;கு அவசியமான சில வெளிப்பாடுகளை வழங்குவதற்கு சில புதுமையான முறைகள் அவசியமாகிறது.

• விசேட நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தற்காலிகமான ஒரு பயணத்தடையை விதிக்கவேண்டும.; கீழ் நீதிமன்றங்கள் சிலவேளைகளில் அவர்களின் பயணத்தடையை விலக்கியபோதிலும் விசேட நீதிமன்றங்கள் இதை அமல்படுத்த வேண்டும்.

 

நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை ஆரம்பிக்காவிட்டால் நாட்டில் எதுவுமே மாறாது. இதற்கு வேறு பல நடவடிக்கைகளும் உதவியாக இருக்கும். அவைகளை மேற்பரப்புக்கு கொண்டுவந்து வேகத்தையும் ஆர்வத்தையும் உருவாக்குவோம்.

 

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Share:

Author: theneeweb