சட்டவிரோத கசிப்பு உற்பத்திகளால் மாணவர்கள்,பெண்கள் அசௌகரியம்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் மேற்கொள்ளபபட்டு வருகின்ற சட்டவிரோத கசிப்பு உற்பத்திகளால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெண்கள் யுவுதிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தேவிபுரம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பிரதேசத்தில் 305இற்கும் மேற்பட்ட குடும்பங்கள்  அனைத்தும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களாகக் காணப்படுகின்றன.

இந்நிலையில் இந்தப்பிரதேசத்தில் சட்டவிரோதக் கசிப்பு உற்பத்தி விற்பனைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

இதனால் தனது கிராமத்தில் பலர் பல்வேறு அசெகரியங்களுக்குள்ளாகி வருவதாக சுட்டிக்காட்டிய மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்தினர் இது தொடர்பில் கருத்துத்தெரிவிக்கும் போது,

தமது பிரதேசத்தில் இருந்து கடந்த காலங்களில் வெளியிடங்களில் சென்று உயர் கல்வி கற்பது மிகமிகக்குறைவு கடந்த மூன்று வருடங்களாக எமது பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் கண்டு புதுக்குயடியிருப்பு, உடையார்கட்டு, இரணைப்பாலை ஆகிய பாடசாலைகளுக்;கு உயர் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்காக செல்கின்றனர்.

இந்நிலையில் அண்மைக் காலமாக இவ்வாறு பாடசாலை செல்கின்ற மாணவிகள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக செல்கின்ற பெண்கள் மீது பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அதாவது, இவை அனைத்துக்கும் இங்கே இருக்கின்ற சட்டவிரோத கசிப்பு உற்பத்தியே காரணமாக இருக்கின்றது.

எனவே இவ்வாறான சட்டவிரோத கசிப்பு உற்பத்திகளைக் கட்டுப்படுத்த உரிய தரப்புக்கள் நடவடிககை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share:

Author: theneeweb