போலிச் செய்திகளை தடுக்க பத்திரிகையாளர்களை நியமிக்கவுள்ளோம்: மார்க் ஸக்கர்பெர்க்

ஃபேஸ்புக்கில் உலவும் போலிச் செய்திகளை தடுக்க பத்திரிகையாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஐரோப்பாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான ஆக்ஸல் ஸ்பிரிங்கர் முதன்மை செயல் அதிகாரி மதாயிஸ் டோஃப்னர் உடன் ஃபேஸ்புக் முதன்மை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் சந்தித்தார். இதையடுத்து அவர் பேசியதாவது:

ஃபேஸ்புக்கில் எவ்வளவு போலி கணக்குள் உள்ளதென்று உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம், அது மிகப்பெரிய அளவில், சுமார் 700 மில்லியன் போலி கணக்குகள் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை போலி கணக்குகள் எவ்வாறு உருவானது என்று தெரியவில்லை. இருப்பினும் இதனை விரைவில் சரிசெய்ய வேண்டிய அவசியம் மிக முக்கியமானதாகும்.

எனவே இதனை சரிசெய்யும் விதமான நடவடிக்கைகளை ஏற்படுத்தவுள்ளோம். அவ்வகையில் பத்திரிகையாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளோம். அவர்கள் ஃபேஸ்புக்கில் இடம்பெறும் உண்மை மற்றும் போலிச் செய்திகளை கண்டறிய பயன்படுத்தப்படுவார்கள். இதன்மூலம் சரியான தகவல்கள் மட்டும் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.

markமுன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவுடன் தொடர்புடைய 687 போலி கணக்குகள் மற்றும் பக்கங்களை, முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனம் நீக்கியுள்ளது. இதேபோல், பாகிஸ்தானிலிருந்து இயக்கப்பட்டு வந்த சுமார் 103 போலி கணக்குகள், குழுக்கள், பக்கங்களை நீக்கி ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

Share:

Author: theneeweb