நெதர்லாந்துக்கு ஏற்றுமதியாக இருந்த 3 லட்சம் தவறான உலக வரைபடங்களை அழிக்க சீனா முடிவு

இந்தியாவின் வடகிழக்கே அருணாசல பிரதேசம் உள்ளது.  இதனை தெற்கு திபெத்தின் ஒரு பகுதியாக சீனா உரிமை கோரி வருகிறது.  ஆனால் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாசல பிரதேசம் என அங்கு செல்லும் இந்திய தலைவர்கள் நாட்டின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து வருகின்றனர்.  இதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
The €250 Bitcoin Investment That’s Making People Rich
Crypto Soft
Dies Wird Dein Leben Eines Tages Retten
GND.com
ஆனால், நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்வதுபோல் அருணாசல பிரதேசத்திற்கும் இந்திய தலைவர்கள் சென்று வருகின்றனர் என இந்திய அரசு கூறி வருகிறது.
இந்த நிலையில், தைவானை தனி நாடாகவும் மற்றும் சீனா மற்றும் இந்திய எல்லையை தவறாகவும் காண்பிக்க கூடிய வகையில் அருணாசல பிரதேசத்தினை ஒரு பகுதியாக குறிப்பிடாத 30 ஆயிரம் உலக வரைபடத்தினை சீன சுங்க துறை அதிகாரிகள் கண்டறிந்து அழித்துள்ளனர்.  இந்த வரைபடங்கள் வேறு நாடு ஒன்றிற்கு ஏற்றுமதியாக இருந்தது.
சீன மற்றும் இந்திய எல்லை விவகாரம் பற்றி இரு நாடுகளும் இதுவரை 21 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.  தைவான் தீவையும் தனது ஒரு பகுதியாக சீனா உரிமை கோரி வருகிறது.
இந்நிலையில், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள டாங்குவான் நகரில் நிறுவனம் ஒன்று ஆங்கிலத்தில் அச்சான 3 லட்சத்து 6 ஆயிரத்து 57 தவறான உலக வரைபடங்களை நெதர்லாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய இருந்தது.  இவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த வரைபடங்கள் சீனாவின் எல்லையை தவறாக ஒருங்கிணைத்து காட்டியுள்ளன.  அதனால் இவை அழிக்கப்படும்.  இவற்றை ஏற்றுமதி செய்ய முயன்ற சந்தேகத்திற்குரிய 4 பேர் மீது வழக்கு தொடரப்படும் என சுங்க இலாகாவை சேர்ந்த அதிகாரி வாங் என்பவர் தெரிவித்துள்ளார்.
Share:

Author: theneeweb