கரைச்சி பிரதேச சபை செயலாளருக்கு இடமாற்றம் புதிய செயலாளரை நியமிப்பதில் நெருக்கடி


கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய கம்சநாதன் கடந்த வாரம் முதல் பூநகரி பிரதேச சபையின் செயலாளராக இடமாற்றம் வழங்க்கப்பட்டுள்ளது. அத்தோடு கரைச்சி பிரதேச சபைக்கு புதிய செயலாளரை நியமிப்பதில்நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது என வட மாகாண உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.
தற்போது கரைச்சி பிரதேச சபை புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் ஆனால் எவரும் கரைச்சி பிரதேச சபைக்கு செயலாளராக செல்வதற்கு முன்வரவில்லை கடந்த  சில நாட்களுக்கு முன் ஒருவர் புதிதான கரைச்சி பிரதேச சபைக்கு செயலாளராக நியமிக்கப்பட்ட  போதும் அவர் தான் கரைச்சி பிரதேச சபைக்கு  செல்லவில்லை என சில காரணங்களை எழுத்து மூலம் அறிவித்து  கடமைகளை பொறுப்பேற்கவில்லை.
இந்த நிலையில் புதிய செயலளர் ஒருவரை கரைச்சி பிரதேச சபைக்கு நியமிப்பதில் தொடர்ந்தும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. வடக்கில் தகுதியான பலர் உள்ள போதும் எவரும் இதுவரை முன்வராமையே இந்த நெருக்கடிக்கு காரணம் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
Share:

Author: theneeweb