மீள்குடியேற்றத்திற்கு தனியாரிடம் காணிகளை பெற அனுமதி

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நிலவிய மோதல்கள் காரணமாக 25 நலன்புரி முகாம்களில் உள்ளுரில் இடம்பெயர்ந்த 577 குடும்பங்கள் தொடர்ந்தும் வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.

இவர்களுள் 381குடும்பங்கள் காணிகளை இழந்த குடும்பங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளன.

அப்படி இருந்த போதிலும் யாழ்ப்பாண பிரதேசத்தில் அரச காணி போதுமளவு இல்லாததன் காரணமாக இவர்களை மீளக்குடியமர்த்துவதற்காக அரசாங்கத்தினால் காணிகளை ஒதுக்கீடு செய்வது பாரிய பிரச்சினையாக இருந்து வருகின்றது.

இதனால் இந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்குத் தேவையான காணியை மதிப்பீட்டாளர்களின் மதிப்பீட்டுக்கு அமைய தனியார் உரிமையாளர்களிடம் கொள்வனவு செய்வதற்காக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீளக்குடியமர்த்தல் மற்றும் புனர்வாழ்வு மற்றும் வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

Share:

Author: theneeweb