200க்கும் அதிகமான அகதிகள் துருக்கியில் கைது

இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான அகதிகள்  துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துருக்கியின் வடமேல் எரிரென் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமான முறையில் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிப்பதற்காக துருக்கியை ஆட்கடத்தற்காரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு பயணிப்பதற்கு தயாராக இருந்த வேளையிலேயே குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களது விபரங்கள் எவையும் இதுவரையில் வெளியாக்கப்படவில்லை.

Share:

Author: theneeweb