வெள்ளப்பெருக்கு அவலங்கள்

–   —       கருணாகரன் —

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், இதை விட இன்னும் ஒரு சில ஆயிரம் பேர் கூடுதலாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உள்ளுர்த் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் இடம்பெயர்ந்து முகாம்களுக்கோ பொது இடங்களுக்கோ வரவில்லை. தங்கள் வீடுகளில் மிகுந்த சிரமங்களின் மத்தியில் வாழ்கின்றனர். அவர்களுடைய கால்நடைகளும் பயிர்களும் அழிந்துள்ளன. போக்குவரத்துகளும் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏன், இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கூட சிறைப்படுத்தப்பட்டதைப்போல போக்குவரத்துக்கான பாதைகளை இழந்த நிலையிலேயே ஒருநாள் முழுவதும் இருந்திருக்கிறார். அந்தளவுக்கு சுற்றிவளைத்திருக்கிறது வெள்ளம். போதாக்குறைக்கு வீதிகளை மூடி அடாத்துப் பண்ணுகிறது.

 

இந்த வெள்ளப்பாதிப்புக்குக் காரணங்களாக ஒரே நாளில் 360 – 400 மி.மி வரை பெய்த கூடுதலான மழை வீழ்ச்சி, பிறகும் தொடர்ச்சியாக பெய்த மழை, உரிய நேரத்தில் இரணைமடுக்குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படாமை, சீரான வடிகாலமைப்பின்மை, நீரோடும் பகுதிகளிலும் நீரேந்து பிரதேசங்களிலும் அமைந்திருக்கும் அத்துமீறிய குடியேற்றங்கள், முறையற்ற மணல் அகழ்வுகள் எனப் பலவும் சொல்லப்படுகின்றன.

 

இதையெல்லாம் கவனித்தே ஆக வேண்டும். அதாவது அனர்த்த நிலைமைகளை முகாமை செய்வதற்கான ஏற்பாடுகளை நிர்மாணத்திலும் நிர்வாகத்திலும் கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்பதை தற்போதைய நெருக்கடிகள் உணர்த்தியுள்ளன.

 

வெள்ளத்திலிருந்து சனங்களை மீட்பதில் உள்ளுர் இளைஞர்களும் படையினரும் முன்னின்று செய்தனர். தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உத்தியோகத்தர்களும் மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்களும் களத்திலிறங்கி வேலை செய்யத் தொடங்கினார்கள். ஒரே நாளில் அகதிகளைப் பாதுகாப்பான இடங்களில் சேர்க்கும் முயற்சிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன. இதனால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் வீடுகளிலிருந்த உடமைகள், கால்நடைகள் போன்றவற்றைப் பாதுகாக்க முடியவில்லை.

 

பாதுகாப்பான இடங்களில் சேர்க்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவு வழங்கல் தொடக்கம் படிப்படியாக ஏனைய அவசிய உதவிகளை பல்வேறு அமைப்புகளும் களத்திலிறங்கிச் செய்யத் தொடங்கின. உதவிப் பொருட்களைச் சேகரிப்பதும் வழங்குவதும் என்றநிலையில் பணிகள் நடந்தன

 

வெள்ள நிலைமைகளை துல்லியமாக வெளிப்படுத்தியதில் இந்தப் பிரதேசங்களில் செயற்படும் ஊடகவியலாளர்களின் பங்கும் முகநூல் பதிவர்களின் பங்களிப்பும் மிகப் பெரியது. இதனால் உடனடியாகவே வெள்ள அனர்த்தம் பற்றிய சேதிகள் வெளியே தெரியவந்தன. இதனையடுத்து பல்வேறு இடங்களிலும் பாதிப்புக்குள்ளான மக்களைக் குறித்த கரிசனை ஏற்பட்டது. அரசாங்கமும் இதையிட்டுக் கவனம் கொண்டு செயற்படத் தொடங்கியது.

 

அரசாங்கத்தரப்பிலிருந்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார 24.12.2018 அன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நேரில் பயணம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார். கூடவே மக்கள் தங்கியிருந்த நலன்புரி நிலையங்களுக்கும் சென்றிருந்தார். அமைச்சர் வந்தபோது அவருடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கொண்டனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுப் பொருட்கள் வழங்குவது தொடக்கம், தொற்று நோய்த்தடுப்பு முதற்கொண்டு அவசியமான பணிகளை மேற்கொள்வதற்கான கட்டமைப்பு செயற்படத் தொடங்கியது.

 

இதேவேளை தன்னார்வ முயற்சியாக அரசியல் கட்சிகள், பொது மக்கள், பொது அமைப்புகள், இளைஞர்கள், பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் எனப் பல தரப்பினரும் பல்வேறு உதவிப் பணிகளில் ஈடுபட்டனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அப்பால், வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு எனப் பல இடங்களிலிருந்தும் உதவிப் பொருட்களும் சேகரித்து அனுப்பப்பட்டன. இந்த இடங்களிலிருந்து உதவியாளர்களும் பாதிக்கப்பட்ட மக்களிடம் வந்து உதவத் தொடங்கினர். புலம்பெயர் நாடுகளிலிருந்தும் நிதிச் சேகரிப்பும் பொருட் சேகரிப்பும் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மனரீதியாகத் தெம்படைந்தனர். இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என யாரும் எதிர்பார்க்கவேயில்லை. தொடர்ந்தும் உதவிப் பொருட்கள் சேகரிக்கப்படுகிறது, வழங்கப்படுகிறது. களப்பணி என்பது எதிர்பார்க்கப்பட்டதையும் விட உச்சமாக இருக்கிறது என்றே கூற வேண்டும்.

 

அனர்த்தங்களின்போது இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகள் எல்லாம் கரைந்தழிந்து மனிதாபிமானமும் அன்பும் கருணையும் மேலெழுகிறது. 2004 இல் சுனாமி அர்த்தம் ஏற்பட்டபோதும் இதைப்போன்று எல்லோரும் ஒன்றிணைந்து உதவிப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அனர்த்தத்தின்போது மட்டுமல்ல, அழிவுகளிலிருந்து  மீளெழுவதற்கான மீள் கட்டமைப்புக்கும் அந்த உதவிகளும் உதவிப் பணிகளும்கூடக் கிடைத்தன.

 

தற்போதைய உதவிகள் முதற்கட்டமாக உடனடிப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கானவை. குறிப்பாக உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களே கிடைத்து வருகின்றன. வெள்ளம் வடிந்த பிறகே ஏற்பட்ட பாதிப்புகளின் முழுமையான விவரத்தை மதிப்பிட முடியும். அப்போதுதான் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளையும் உட்கட்டமைப்புச் சிதைவுகளையும் பற்றி அறியலாம்.

 

இப்போதைய அவதானிப்பில் வீதிகள், வயல்நிலங்கள், ஆறுகள், வாய்க்கால்கள், பாலங்கள்என உட்கட்டமைப்பு மோசமாகச் சிதைந் திருப்பதைக்  காணமுடிகிறது.

 

இதைவிடக்கால்நடைகளின்உயிரிப்பு. பயிர்ச்செய்கை, வீடுகளின் சேதம்எனப் பெரியபொருளாதார இழப்பும்ஏற்பட்டுள்ளது.

 

இதுமக்களின் வாழ்க்கையை மேலும்பத்தாண்டுகளைப்பின்னுக்குத்தள்ளப்போகிறது.

 

குறிப்பாகவெள்ளம் பாய்ந்தவயல்களின் நிலைமிகமோசமாக உள்ளது. இது நெற்செய்கைக் காலம் என்பதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் அழிவைச் சந்தித்துள்ளன. நூற்றுக்கணக்கான ஏக்கர்வயல்நிலப்பரப்பில் மணல்குவிந்திருக்கிறது. இதை அப்புறப்படுத்துவது  லேசானதல்ல. அப்படித்தான் அகற்றினாலும் வயலின்நிலவளம் உடனடியாகச் சீராகும்என்றில்லை.

 

இதைப்போலஒவ்வொன்றையும்மீள்நிலைப்படுத்துவதென்பதுசாதாரணமானதல்ல.

 

ஏற்கனவேஇந்த மாவட்டங்களிலுள்ள வீதிகள், பாலங்கள்உட்படப்பலவும் முழுதாகப் புனரமைக்கப்படாமல் மிகுந்தசிரமங்களுடனேயே வாழ்ந்தமக்களுக்கு இதுஇரட்டைப்பாதிப்பாகும்

.

இதைக்கவனத்தில் எடுப்பதே அரசாங்கத்தினதும் அரசியல்தலைவர்களினதும் பொறுப்பாகும்.

 

இதைக்குறித்து இப்போதே சிந்திக்கவேண்டும். இதையெல்லாம் இப்போதுபேசமுடியாது. இதைப்பற்றிப் பிறகுதான் பேசமுடியும் என்றால்அவ்வளவுதான்கதை.

 

பிறகு இதைப்பற்றியாருமே பேசப்போவதில்லை.

 

அவர்களுக்கு இதைவிட வேறு சோலிகள் வந்துவிடும்.

Share:

Author: theneeweb