நலன்புரி முகாம்களில் வாழ்க்கையை நடத்தி வரும் 577 குடும்பங்கள்

வடக்கு, கிழக்கில் நிலவிய மோதல்கள் காரணமாக உள்ளுரில் இடம்பெயர்ந்த 577 குடும்பங்கள் தொடர்ந்தும் 25 நலன்புரி முகாம்களில் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

அவர்களுள் 381குடும்பங்கள் காணிகளை இழந்த குடும்பங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் அரச காணி போதுமான அளவு இல்லாததன் காரணமாக அவர்களை மீளக்குடியமர்த்துவதற்காக அரசாங்கத்தினால் காணிகளை ஒதுக்கீடு செய்வது பாரிய பிரச்சினை நிலவி வருகின்றது.

இந்த நிலையில், குறித்த குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்குத் தேவையான காணியை மதிப்பீட்டாளர்களின் மதிப்பீட்டுக்கு அமைய தனியார் உரிமையாளர்களிடம் கொள்வனவு செய்வதற்காக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீளக்குடியமர்த்தல் மற்றும் புனர்வாழ்வு மற்றும் வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share:

Author: theneeweb