மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த 3 பேர் கைது

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 3 பேர் தெலுங்கானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராசாகொண்டா காவல்துறையினரால் பெண் ஒருவர் உட்பட மூன்றுபேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அவர்கள், 30, 33 மற்றும் 37 வயதுடையவர்களாவர்.

குறித்த மூவரும், இலங்கை, எகிப்து, துருக்கி உட்பட மேலும் சில நாடுகளுக்கு மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

20 இலட்சம் இந்திய ரூபா அளவில் சிறுநீரகங்களை விற்பனை செய்ய அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த மூன்று சந்தேகத்துக்குரியவர்களில் ஒருவர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நோயாளர்களையும், உடல் பாகங்களை விற்பனை செய்பவர்களையும் அனுப்பி, சுமார் 40 மனித உடல் பாகங்களை மாற்றும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார் என இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Share:

Author: theneeweb