“ஸ்ரீலங்காவில் போருக்குப் பிந்தைய குழப்பங்கள்: ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம்”:

எஸ்.ஐ.கீதபொன்கலன் எழுதிய நூல் ஆய்வு

லக்சிறி பெர்ணாண்டோ —

மற்றவர்களுக்கு இடையில் அரசியல் விஞ்ஞானம் மற்றும் அரசியல் விஞ்ஞ}னிகள், யுத்தத்துக்குப் பின்னான ஸ்ரீலங்காவின் மிகவும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பான யுத்தத்துக்குப் பின்னான இன நல்லிணக்கம், கட்டுமானம், ஜனநாயகத்தை மீளநிறுவுதல் மற்றும் சர்வாதிகாரத்தின் ஆபத்துக்களில் இருந்து மீண்டு வருதல் போன்றவற்றை முக்கியமான சிந்தனை, விஞ்ஞானபூர்வமான ஆராய்சி மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் புதிய உத்வேகத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தெளிவாக எழுதப்பட்ட பிரசுரங்கள் மூலம் முக்கியமான ஒரு பாத்திரத்தை வகிக்கலாம்.

“ஸ்ரீலங்காவில் போருக்குப் பிந்தைய குழப்பங்கள்: ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம்” என்கிற தலைப்பில் கலாநிதி எஸ்.ஐ. கீதபொன்கலன் எழுதிய புதிய புத்தகத்தின் மதிப்பீட்டை குறிப்பாக இந்தப் பின்னணியில் ஆராய முடியும், இருப்பினும் அதன் முக்கியத்துவம் சந்தேகத்துக்கு இடமின்றி இலங்கையின் கரைகளுக்கு அப்பால் செல்கிறது.

கீதபொன்கலன் அமெரிக்கா, மெரிலான்ட், சாலிஸ்பரி பல்கலைக்கழகத்தில் மோதல் தீர்வுத்துறை பற்றிப் போதித்து வருகிறார் மற்றும் அதே பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் மோதல் ஆய்வு மற்றும் விவாத தீர்மானத் துறைக்கு தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2011ல் சாலிஸ்பரி பல்கலைக்கழகத்தில் இணைவதற்கு முன்பு அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுக் கொள்கைத் துறையின் தலைவராகவும் பேராசிரியராகவும் கடமையாற்றியதுடன், மோதல் தீர்வு, சமாதனக் கற்கைகள், இடைக்கால நீதி மற்றும் ஆயுதக்களைவு போன்ற அநேக சர்வதேச பணிகளை வருடங்கள் முழவதும் மேற்கொண்டிருந்தார்

. அவரது வெகு சமீபத்தைய இரண்டு வெளியீடுகளான – மோதல் தீர்வு: மூன்றாம் தரப்பினரின் தலையீட்டுக்கு ஒரு அறிமுகம் (லெக்ஸ்ங்டன் புத்தகங்கள் 2017) மற்றும் யுத்தத்துக்குப் பின்னான வன்முறை, அகிம்சை, மற்றும் இன நல்லிணக்கம்(சமாதானம் மற்றும் கொள்கை2015), என்பன தற்போதைய ஆய்வு மற்றும் பிரசுரங்களுக்கு மிகவும் தொடர்புடையதாக உள்ளன. அவரது தற்போதைய புத்தகம் ஒரு றூட்லெட்ஜ் பிரசுர வெளியீடு, லண்டன் மற்றும் நியுயார்க்கில் இப்போது வெளியாகியுள்ளது.

விசாரணை செய்யப்பட்டிருப்பது என்ன?

S. I. Keethaponcalan

ந்தப் புத்தகழ் சம்பந்தப்பட்ட விசாரணைக்கு ஸ்ரீலங்கா ஒரு ஆய்வுக்கான விடயமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது ஆனால் பொருத்தமான ஒன்றாக உள்ளது. அது பொருந்துவது ஸ்ரீலங்கா எழுத்தாளரின் சொந்த நாடாக இருப்பதினால் அல்ல, ஆனால் ஏனென்றால் இன மோதல் மற்றும் யுததம் என்பன நீடித்த பாத்திரத்தையும் பல விளைவுகளையும் கொண்டிருப்பதால்தான். 2009ல் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும்கூட முன்னேற்றம் அல்லது நிகழ்வுகள் நிறையத் திருப்பங்கள் நிறைந்த கடினமானமானதாகவும், முரண்பாடானாதாகவும் மற்றும் நிச்சயமற்றதாகவுமே உள்ளன.

சிங்கள – தமிழ் இன நல்லிணக்கத்துக்கு ஒரு சந்தேகத்துக்கு இடமற்ற கவனம் செலுத்தி அணுகப்பட்டுள்ள புலானாய்வு, ஸ்ரீலங்காவை அதிகம் ஜனநாயகமானதாக அல்லது பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்வதின் மூலம் இனமோதல் தானாகவே நல்லிணக்கம் அடைந்துவிடும் என்கிற பிரபலமான கருத்து அல்லது கட்டுக்கதைக்கு சவால் விடுகிறது. இந்தக் கருத்தைத்தான் எழுத்தாளர் சவால் மற்றும் மறுப்புச் செய்கிறார். முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் அலட்சியப்படுத்தாமல் ஆசிரியர் தொகுத்துள்ள புத்தகத்தில் உள்ள புதுமை இதுதான்;. இதன் கருத்து ஆசிரியர் நல்லிணக்கத்துக்கான ஜனநாயகம் அல்லது பொருளாதார அபிவிருத்தி என்பனவற்றுக்கான முக்கியத்துவத்தை சர்ச்சைக்குரியதாக அல்லது புறக்கணிப்பதாகவோ கருதுகிறார் என்பதல்ல, ஆனால் அதற்கு நேர்மாறாக முறையான மோதல் அடையாளம், உரையாடல், பேச்சுவார்த்தைகள், மக்களின் தொடர்பு, மோதல் தீர்மானம் ஆகியவற்றில் நேரடியாக ஈடுபட வேண்டியதின் அவசியத்தைக் குறிப்பிடுகிறார்.

புத்தகத்தில் அநேக தகுதிகள், மதிப்புகள் மற்றும் பயன்கள் கோட்பாட்டு ரீதியாகவும் மற்றும் அனுபவபூர்வமாகவும் அடங்கியுள்ளன. ஆசிரியர் சொல்வது “யுத்தத்தின் முடிவு யுத்தத்துக்குப் பின்னான ஆட்சி மற்றும் ஸ்ரீலங்காவின் இன உறவுகள் என்பனவற்றில் ஆழந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று. யுத்தம் முடிவடைந்த போதிலும் நல்லிணக்கம் தொடர்ச்சியான சிக்கலுக்கு உள்ளாவதற்கு இது முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது என்று அவர் பிரதானப்படுத்திக் காட்டுகிறார்.

 

யுத்தத்துக்குப் பின்னான குழப்பம் பற்றிய விடயம் பற்றி எழுதப்பட்ட ஆழமான அத்தியாயங்கள், நிகழ்வுகளின் வரலாற்றை தேடும்போது யுத்தத்துக்கு பிந்தைய இரண்டுவகையான ஆட்சியின் குணாதிசயங்கள் மற்றும் சிங்களவர்களுக்கும் மற்றும் முஸ்லிம்களுக்கும் இடையில் புதிய தவறுகளை தோற்றுவிக்கும் வகையிலும் இந்த நல்லிணக்கத்தின் நோக்கங்கள் இந்த விடயத்தின்மீது வெளிச்சம் பாய்ச்சுகின்றன.

இந்தப் புத்தகம் ஆறு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. (1) கோட்பாட்டு ரீதியான கண்ணோட்டம், (2) யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருதல்: பூஜ்யமான சூழ்நிலை, (3) ஜனநயகம் : ஒரு போராட்டம், (4) நல்லிணக்கம்: ஒரு தொலைதூரக் கனவு, (5) சிங்களவர் எதிர் முஸ்லிம்கள் ஒரு புதிய எல்லை, மற்றும் (6) முடிவு என்பனவே அவை. கோட்பாட்டு ரீதியான கண்ணோட்டம் அரசியல் விஞ்ஞானம் மற்றும் மோதல் தீர்வு மாணவர்களுக்கு மகத்தான பயனுள்ளதாக இருக்கும். மற்றவைகளும் அதேபோல இந்தத் துறையில் உள்ள மாணவர்களைத் தவிர மற்றவர்களான,அரசியல் தலைவர்கள், சமாதான ஆர்வலர்கள், சர்வதேச பார்வையாளர்கள் மற்றும் எதிர்கால ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு பயன்தருபவையாக உள்ளன. இந்த ஆய்வில் அனைத்தையும் உள்ளடக்க இயலாது ஆனால் புத்தகத்தின் சில அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

போர் முடிவடைந்த பூச்சிய நிலைப்பாட்டைப் பற்றி விவாதிக்கையில், எப்படி என்கிற கேள்விகளை மட்டுப்படுத்தாமல் ஆசிரியர் ஏன் எல்.ரீ.ரீ.ஈ தோற்கடிக்கப்பட்டது என்பதை ஆராய்ந்துள்ளார். இதற்கு மூன்று பிரதான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. (1) இராணுவம் மற்றும் அரசியல் ரீதியான ராஜபக்ஸ அரசாங்கத்தின் மூலோபாயங்கள், (2) தமிழ் சமூகத்திற்குள் எல்.ரீ.ரீ.ஈ இனது நெறிமுறையற்ற தன்மை மற்றும் இராணுவ பலவீனங்கள் தோன்றுதல், மற்றும் (3) சில நேரங்களில் தெளிவற்றதாக இருந்த போதிலும் எல்.ரீ.ரீ.ஈ இனைத் தோற்கடிப்பதற்கு சர்வதேச ஆதரவு வழங்கப்பட்டமை. யுத்த முடிவு பற்றி மதிப்புள்ள இந்த ஆய்வு வடக்கினைப் பற்றி எண்ணற்ற அனுபவம் வாய்ந்த ஒரு அரசியல் விஞ்ஞானியால் மேற்கொள்ளப்பட்டது.

அரசியல் முன்னேற்றங்களைக் கண்டுபிடித்தல்

ராஜபக்ஸ அரசாங்கத்தின் உடனடி இராணுவ வெற்றி பற்றி ஆசிரியர் கண்டிருப்பது, ஜனநாயக சீரழிவு என்று. “வேறு வார்த்தைகளில் சொன்னால் ஸ்ரீலங்கா ஒரு அதிகாரபூர்வமான சர்வாதிகார அரசாக மாறியுள்ளது. எவ்வறாயினும் முன்னரோ அல்லது யுத்தம் ஆரம்பிக்கும் போதோ ஸ்ரீலங்கா ஒரு சிறப்பான ஜனநாயக நாடாக இருந்தது என்று அவர் பரிந்துரைக்கவில்லை. 1970 களிலேயே நாட்டில் விரைவான ஜனநாயகச் சீரழிவு ஏற்பட்டது என ஆசிரியர் கண்டுபிடித்துள்ளார். எனினும் போரின் உடனடிப் பின்னணியைத் தொடர்ந்தே அதில் சரிவு அல்லது சீரழிவு ஆழமானது மற்றும் அது கிட்டத்தட்ட அரசியல் மற்றும் சமூக வாழ்வியல் என்பனவற்றின் அனைத்து அம்சங்களிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தின் பெரும்பகுதி முழவதும் ராஜபக்ஸவின் கீழ் ஏற்பட்ட ஜனநாயகச் சீரழிவு பற்றிக் குறிப்பிடுகிறது. தேர்தல் நடவடிக்கை ஊடாக, அரைவாசி குடும்ப ஆட்சியை நிறுவுதல், அரசியலமைப்புக்கு திருத்தங்கள் செய்வதின் மூலம் அதிகாரத்தை மையப்படுத்தி, நீதி, ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகம் என்பனவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல் என்பனவற்றுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அதே அத்தியாயத்தில் 2015ம் ஆண்டிற்குப் பிறகு திட்டமிடப்பட்ட ஜனநாயக மறுசீரமைப்பு பற்றி ஒரு கேள்விக்குறியுடன் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஏன் ஒரு கேள்விக்குறி? ஆசிரியர் ஒப்புக்கொள்வது, 2015ல் ஆட்சிக்கு வந்த எதிர்க்கட்சி
இரண்டு தேர்தல்களிலும் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள் மிகவும் பரந்த அளவில் இருந்தன. “அமைதி. நல்லிணக்கம், அரசியலமைப்புச் சீர்திருத்தம், ஊழல் நீக்குதல் மற்றும் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைத்தல் மற்றும் பல விஷயங்கள் நல்லாட்சி அரசின் தேர்தல் விஞ்ஞ}பனத்தின் தலைப்பாக இடம்பெற்றிருந்தன என்பதை ஆசிரியர் ஒப்புக்கொள்கிறார். ஆசிரியர் தானே கண்டுபிடித்த நீண்டகாலச் சீரழிவைக் கருத்தில் கொள்ளும்போது, ஜனநாயகத்தை மீள நிலைநிறுத்துவது மற்றும் நல்லாட்சியை நிறுவுவது என்பது உண்மையில் ஒரு எளிதான பணி அல்ல. ஆனால் தேசிய நல்லிணக்கத்தின் பணிகளை அதே பையில் போட்டு விட்டு அது சாதாரணமானதும் மற்றும் எளிதானதும் என்று கருதுவது முற்றிலும் சரியானதா? இவை ஆசிரியரின் சொல்லாட்சி அடையாளத்துக்கு அப்பால் செல்லும் சிறப்பான பகுதிகளாகும்.

பொதுவான ஜனநாயக மறுசீரமைப்பின் கேள்விக்கு கூட எழுத்தாளரின் தீர்ப்பு தொடர்புடையதாக உள்ளது. அந்த அத்தியாயத்தை நிறைவு செய்யும்போது எழுத்தாளர் சொல்வது “புதிய அரசாங்கத்தை ஆரம்பித்ததில் இருந்து ஸ்ரீலங்காவில் உழைக்கும் சூழல் முன்னேற்றமடைந்துள்ளது என்பதற்கான பொதுவான உடன்பாடு உள்ளது. எனினும் இந்த அரசாங்கத்தைப் பற்றிய ஜனநாயக வெளிப்பார்வை, உதாரணமாக பிணைமுறி மோசடி மற்றும் உள்ளுராட்சித் தேர்தல்களைத் தாமதப்படுத்தல் போன்றவற்றால் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ராஜபக்ஸ நிருவாகத்துடன் ஒப்பிடுகையில் ஐக்கிய அரசாங்கத்தின் ஆட்சி அதிகம் ஜனநாயகமாக உள்ளது என்று வாதிடுவது பாதுகாப்பானதாகும்”.

சிக்கல்

நல்லிணக்கம் ஒரு தொலைதூரக் கனவு என்கிற அத்தியாயத்தில் ஆசிரியர் தனது சொந்த அவதானங்களையும்; யோசனைகளையும் மற்றும் தனது எளிதான ஆய்வுக் கண்டுபிடிப்புகள் மூலமாக வாசகரின் கவனத்துக்கு கொண்டு வருகிறார். இவைகள் குறிப்பாக நல்லிணக்கத்தை முன்னேற்றுவதில்முன்னணியில் உள்ள சர்வதேச சமூகத்துக்கு பயனுள்ளவையாக இருக்கலாம். ஸ்ரீலங்காவில் நல்லிணக்கத்துக்கான தேடலானது பிரதானமாக மேற்கத்தைய நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் என்பனவற்றால் நாட்டில் கட்டாயமாக வெளிப்படுத்தப்படும் ஒரு வெளிப்படையான கட்டமைப்பு என்பதுதான் ஆசிரியரின் வாதமாக உள்ளது.

2012ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு மற்றும் சமீபத்தில்(2017) நடத்தப்பட்ட நேர்காணல்கள் என்பனவற்றின் அடிப்படையில் சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் ஆகிய இரு பகுதியினரும் வெவ்வேறு காரணங்களுக்காக சமரசம் செய்யாமலிருப்பது பெரிதும் கவலையளிக்கிறது. “பெரும்பான்மையான சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு விசேடமாக ஒரு பிரச்சினையும் கிடையாது என்று பரம்பரை பரம்பரையாக நம்பி வருகிறார்கள்”.ஆகவே யுத்தத்தின் முடிவு அல்லது எல்.ரீ.ரீ.ஈயின் தோல்வி என்பன அவர்கள் கருத்தில் உண்மையில் அந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது என்பதாகும். “வெளிப்படையாக சிங்கள – தமிழ் பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது என்பதை பெரும்பான்மையான தமிழர்கள் நிராகரிக்கிறார்கள், ஆனால் வெவ்வேறு காரணங்களுக்காக சமரசம் செய்யப்படாத நிலையில் அவர்கள் உறுதியற்றவர்களாக உள்ளார்கள்”. பெரும்பான்மையான தமிழர்களின் பக்கத்தில் அழிவடைந்த சமூக பொருளாதார நிலமைகள் மற்றும் நாளாந்த வாழ்க்கைப் பிரச்சினைகள் (வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில்) என்பன முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. அரசியல் பிரச்சினைகளில் அவர்களுக்கு எந்த அரசாங்கத்தின்மீதும் எந்தவித அல்லது அதிக நம்பிக்கை கிடையாது. இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், அரசாங்கத்துடனான தமிழ் தேசியக் கூட்டமைப்பின்(ரி.என்.ஏ) ஒத்துழைப்பு பெருமளவு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதுடன் ஒப்பீட்டளவில் சமூகத்துக்குள் ஒரு தீவிரவாத பிரிவையும் தோற்றுவித்துள்ளது.

ஆசிரியர் பிரதானமாக புலனாய்வு செய்திருப்பது வெவ்வேறு சமூகங்களுக்கு இடையில் உள்ள மோதல் பிரச்சினைகள் அல்லது பொருத்தமற்றவைகள் என்பனவற்றையே மற்றும் இதன்படி நல்லிணக்கம் என்பது அந்த சமூகங்கள் இடையே ஒன்றாக வருவதாகும். அதேவேளை மோதலுடன் பிணைந்துள்ள அரசியல் காரணிகள் பற்றி முற்றாக புலனாய்வு செய்திருப்பது அந்தப் புத்தகத்தின் நோக்கத்திற்கு அப்பால் சென்றுள்ளது என்கிற கூற்று அல்லது அனுமானம் அரசியல் அதிகாரத்திற்கான அரசியல் உயரடுக்கினர் இடையில் மோதலை முன்வைத்தல் அல்லது கருதுகோள் என்கிற கருத்தாக்கத்திற்கு முற்றிலும் உட்பட்டுள்ளன. இந்த வகையான கருதுகோள் அல்லது அனுமானம் பகுதியளவு செல்லுபடியாக்கத்திற்கும் மற்றும் கூட்டணிகள் மற்றும் கூட்டுவாழ்க்கை ஊடான அரசியல் உயரடுக்கினரது தற்போதைய சமரச முயற்சிகளின் நினைவுச்சின்னமான பலவீனத்தைப்பற்றியும் பேசுகிறது.

உயரடுக்கினரது அதிகார இலட்சியங்கள் மற்றும் போட்டிகள் என்பன அதிகளவில் சமச்சீரற்றவை. சிங்கள பௌத்த உயரடுக்கினரது மேலாதிக்க மனப்பான்மை அளவுக்கு மீறியதும் விட்டுக்கொடுக்காததும் ஆகும், இது மற்றவர்களின் தீவிரம் மற்றும் சமத்துவமற்ற தன்மையில் இருந்தும் பெருமளவு விலகி நிற்கிறது. சிங்களம் மற்றும் முஸ்லிம்களிடையே தவறான பாதையை தோற்றுவித்துள்ள புதிய எல்லை பற்றி ஆசிரியர் மேற்கொண்டுள்ள ஆய்வுகள் நிலமையை தெளிவாக விளக்குகிறது. விசாரணைகள் மற்றும் பகுப்பாய்வுகள் என்பன இன்றைய தேதி வரை புதுப்பித்த நிலையில் உள்ளன. வரலாற்றுப் பின்னணியை பின் தொடர்ந்து தமிழ் – முஸ்லிம் பகைமையை கண்டுபிடித்த பின்னர் சமீப காலங்களில் நடைபெற்ற முஸ்லிம் விரோத கலவரங்கள் பற்றி ஆசிரியர் ஒரு விரிவான கணக்கைத் தருகிறார்.

இந்த இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு என்பன காரணமாக நல்லிணக்கம் சிக்கல் நிறைந்ததாக மாறியுள்ளது மற்றும் அரசியல் தலைவாகள், அரசியல் ஆர்வலாகள், மற்றும் அக்கறையுள்ள சர்வதேச பங்குதாராகள் மிகவும் யதார்த்தமாகவும் மற்றும் ஆக்கபூர்வமான அணுகுமுறையுடனும் வேலை செய்யாவிட்டால் நல்லிணக்கம் திரும்பவும் சிக்கல் நிறைந்ததாக மாறுவதுடன் அது ஒரு தொலைதூரக் கனவாகவே இருக்கும்.

Dr. Laksiri Fernando

ஆசிரியர் தனது முடிவுரையில் தெரிவித்திருப்பது என்னவென்றால்: “தற்போதைய நிலையிலுள்ள தமிழர்களின் அதிருப்தி மிகவும் அதிகமாக உள்ளதினால் சிங்களவர்களுக்கும் மற்றும் தமிழ் மக்களுக்கும் இடையில் உள்ள பிளவும் கூட ஆழமானதாகவே இருக்கும். அதிகாரத்தைப் பகிர்வது பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் என்கிற அனுமானத்தின் கீழ் சிங்களவர்கள் அதிகாரப் பகிர்வை எதிர்க்கிறார்கள். தமிழ் தேசியவாதிகளின் உள்ளக அல்லது வெளிப்படையான சுயநிர்ணய உரிமை பற்றிய தொடாச்சியான வலியுறுத்தல் இது பற்றிய சிங்களவாகளின் அவநம்பிக்கைக்கும் மற்றும் எதிர்பபுக்கும் ஒரு பங்களிப்பை மட்டுமே செய்யும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை பிரிவினைக்கு எதிரான பாதுகாப்பையும் உத்தரவாதத்தையும் வழங்குகின்ற ஒரு அதிகாரப் பகிர்வுத் திட்டத்துக்கு மட்டுமே ஸ்ரீலங்காவை நீடித்த சமாதானத்தையும்; மற்றும் நல்லெண்ணத்தையும் நோக்கி நகர்த்தும் சாத்தியம் உள்ளது”.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

 

Share:

Author: theneeweb