நாடு கடத்தப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன் விளக்கமறியலில்

டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை ஏப்ரல் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் இசுறு நெத்திகுமார உத்தரவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனுடன் சேர்த்து நாடு கடத்தப்பட்ட ஏனைய நான்கு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன் உட்பட ஐந்து பேர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

Share:

Author: theneeweb