உருத்திரபுரம் வைத்தியசாலையில் இருந்து கண்டி வைத்தியர்கள் வெளியேற வரக்காபொல வைத்தியர் கடமையேற்றார்.

உருத்திரபுரம் வைத்தியசாலையில் இருந்து கண்டி வைத்தியர்கள் வெளியேற வரக்காபொல வைத்தியர் கடமையேற்றார்.

கடந்த நான்கு வருடங்களாக உருத்திரபுரம், தர்மபுரம், கண்டாவளை, பிரமந்தனாறு ஆகிய வைத்தியசாலைகளில் பணியாற்றிய கண்டியைச்சேர்ந்த மருத்துவர் மனோஜ் சோமரத்தன மற்றும் அவரது மனைவி வைத்தியர் கிரிசாந்தி பிரியதர்சினி இடமாற்றம் பெற்று கொழும்புக்கு செல்ல உருத்திரபும் வைத்தியசாலைக்கு தற்போது வரக்காபொலவைச் சேர்ந்த முஸ்லிம் பெண் மருத்துவர் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கிளிநொச்சி உருத்திரபுரம் வைத்தியசாலையின் மருத்துவர் விடுதியில் தங்கியிருந்து உருத்திரபுரம் வைத்தியசாலையினையும், தர்மபுரம் வைத்தியசாலை மற்றும் கண்டாவளை, பிரமந்தனாறு வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவையும் பொறுப்பேற்று பணியாற்றி வந்த வைத்தியர் மனோஜ் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அத்தோடு இவரின் மனைவி வைத்தியர் கிரிசாந்தி பிரியதர்சினி உருத்திரபுரம் வைத்தியசாலையின் பிரதான வைத்தியராகவும் கடமையாற்றியிருந்தனர். இருவரும் தற்போதும் இடமாற்றம் பெற்று செல்கின்ற நிலையில் வரக்காபொலவை சேர்ந்த முஸ்லிம் பெண் வைத்தியர் தற்போது உருத்திரபுரம் வைத்தியசாலையின் வைத்தியராக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இவர் சீனாவில் தனது மருத்துவ கல்வியை முடித்தவர் என்பதோடு, வைத்தியர் மனோஜ் மற்றும் அவரது துணைவியார் ரஸ்சியாவில் மருத்துவ கல்வியை கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து மருத்துவ துறைக்கு பல்கலைகழகம் சென்று தங்களின் கல்வியை முடிந்து வருடந்தோறும் சராசரி ஐந்து வைத்தியர்கள் வெளியேறுகின்றபோதும் அவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரை தவிர வேறு எவரும் சொந்த மாவட்டத்திற்கு சேவைக்கு வருவதில்லை. என்பது கவலைக்குரியது.

Share:

Author: theneeweb