இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் பெருந்தோட்ட பகுதிகளில் 1000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் பெருந்தோட்ட பகுதிகளில் 1000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் கீழ் மாத்தறை இந்துல தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எஞ்சிய வீடுகளை நிர்மாணிப்பதற்காக பெருந்தோட்ட புறங்களில் உள்ள காணிகளை பெறுவதற்கான அனுமதி தோட்ட நிர்வாகங்களிடம் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதி கிடைக்க பெற்றவுடன் அந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb