சட்டவிரோத வௌிநாட்டு வேலைவாய்ப்பு நிலையம் சுற்றிவளைப்பு; ஒருவர் கைது

கொழும்பு மருதானயைில் சட்டவிரோத வௌிநாட்டு வேலைவாய்ப்பு நிலையம் ஒன்றை நடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான டிக்கட்டுக்களை பெற்றுக் கொடுப்பது போன்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு நிலையம் ஒன்றை நடத்திச் செல்வதாக கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.

இதன்போது அங்கிருந்து வௌிநாட்டு வேலையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்ப படிவங்கள், 23 கடவுச்சீட்டுக்கள், மருத்து சான்றிதழ்கள், பொலிஸ் அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வௌிநாட்டு தொழில் வழங்குவதற்காக ஒரு நபரிடமிருந்து ஒரு இலட்சத்து 50,000 ரூபா வரை பணம் பெற்றுள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.

Share:

Author: theneeweb