சப்ரகமுவா மாகாண ஆளுநரின் தலைமையில் நிவாரணங்கள் கிளிநொச்சியில் வழங்கப்பட்டன.

வடக்கு மாகாண ஆளுநர் றெினோல்ட் குரே ஒன்பது மாகாண ஆளுநர்களிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இன்றைய தினம்(29-12-2018) சப்ரகமுவா மாகாண ஆளுநர் நிலும ஏக்கநாயக்கவின் தலைமையில் நிவாரணப் பொருட்கள் கிளிநொச்சியில் வழங்கி வைக்கப்படடுள்ளன.

வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் கிளிநாச்சி பன்னங்கண்டி பாடசாலையில் இன்று முற்பகல் குறித்த பொருட்களை இரு ஆளுநர்களும் இணைந்து வழங்கி வைத்தனர். குறித்த நிவாரணம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார். பிரதேச செயலாளர்கள் கிராம அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Share:

Author: theneeweb