வவுனியா, ஓமந்தை, சின்னபுதுக்குளம் பிரதேசத்தில் இரு குழுக்களிடையே மோதல் – ஒருவர் கைது

வவுனியா, ஓமந்தை, சின்னபுதுக்குளம் பிரதேசத்தில் நேற்று இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

இந்த மோதலின் போது ஒரு மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் சிலரை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share:

Author: theneeweb