அவுஸ்திரேலியா மெல்போர்ன் ஹம்பர்பீல்ட் பகுதியில் நச்சு கழிவுகள் மீள் சுழற்சி செய்யும் இடத்தில் தமிழ் அகதி ஒருவர் படுகாயம்

அவுஸ்திரேலியா மெல்போர்ன் ஹம்பர்பீல்ட் பகுதியில் நச்சு கழிவுகள் மீள் சுழற்சி செய்யும் இடத்தில் கடந்த வெள்ளிக்கழமை ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் தமிழ் ஏதிலி ஒருவர் படுகாயமடைந்திருந்துள்ளார்.
காயமடைந்தவர் கிளிநொச்சியை சேர்ந்த 26 வயதான ஒருவர் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2012 ஆண்டு படகுமூலம் அவுஸ்திரேலியா சென்ற அவர் சுமார் மூன்றுவருடங்களாக நச்சு கழிவுகள் மீள்சுழற்சி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
வெடிப்பு சம்பவம் காரணமாக அவரது இடது பக்க முகபகுதி மற்றும் தொண்டை பகுதி என்பன பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது நண்பர் ஒருவர் சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த நிறுவனத்திற்கு எதிராக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கொன்றும் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Share:

Author: theneeweb