யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகளவிலான மரக்கறி வகைகள் கிடைப்பதனால், மரக்கறிகளின் விலைகள் 60 வீதத்தினால் குறைவு..

யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகளவிலான மரக்கறி வகைகள் கிடைப்பதனால், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலைகள் 60 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமைத்துவ பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
கறிமிளகாய், கத்தரிக்காய், பீட்ரூட், பூசணிக்காய் மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் பாரிய அளவில் குறைவடைந்துள்ளன.
இதற்கமைய, கறிமிளகாய் கிலோ ஒன்றின் விலை 60 முதல் 65 ரூபா வரையிலும், கத்தரிக்காய் கிலோ ஒன்றின் விலை 30 முதல் 35 ரூபாவரையும் விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், பூசணிக்காய் கிலோ ஒன்றின் விலை 10 முதல் 12 ரூபாய் வரையும், பீட்ரூட் கிலோ ஒன்றின் விலை 20 முதல் 25 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
Share:

Author: theneeweb