மிதவாதம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உதவியதா?

 

என்.சத்தியமூர்த்தி   —

 

மிதவாத தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (ரி.என்.ஏ) செயல் மீண்டும் ஒரு நன்றியில்லாத வேலையாக மாறி வருகிறது. ஒருபுறத்தில் அவர்கள் (மட்டும்); உயிரோடு வைத்திருக்க உதவும் அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள் .மறுபுறத்தில் மறந்து போய்விட்ட எல்.ரீ.ரீ.ஈ ஆகக் குறைந்தது அவர்களில் ஒரு தலைவரையாவது கொல்வதற்கு தொடர்ந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

அந்தச் சமயத்தில் அரசாங்கத்திடம் கேட்டது எல்லாம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானம்: 30ஃ1 யுத்தக் குற்ற விசாரணையை நடைமுறைப்படுத்தும்படி மற்றும் காவல்துறை நாட்டில் ரி.என்.ஏ தலைவர் ஒருவரைக் கொல்வதற்காக சதித் திட்டம் தீட்டினார்கள் என்ற குற்றத்தின் பேரில் சிலரைக் கைது செய்திருந்தது. இலக்கு வைக்கப்பட்ட தலைவர் யாரென்று பெயர் வெளியிடாத போதிலும், ஊடக அறிக்கைகள் தெரிவித்தது அது ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினரும் மற்றும் செய்தித் தொடர்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் என்று.

அது உண்மையானதாக இருந்தால,; சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்டதற்காக முன்னாள் விடுதலைப் புலிகள் அல்லது அனுதாபிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ரி.என்.ஏ இலக்கு வைக்கப்பட்ட தலைவரின் பாதுகாப்பை அதிகரிக்கும்படி உடனடியாக கோரிக்கை விடுத்தது, யாழ்ப்பாணச் சதித்திட்டத்தின் பின்னர் சுமந்திரன் விடயத்தில் பாதுகாப்பு உயர்த்தப் பட்டிருந்தது. இதில் உள்ள மற்றொரு விடயம் எல்.ரீ.ரீ.ஈயின் திட்டத்தினால் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர் சுமந்திரன் என்று ஊடகங்கள் வெளியிட்ட செய்தியினை காவல்துறை மறுத்துரைக்கவில்லை.

யுத்தத்துக்குப் பின்னான காலத்தில் எந்த அரசாங்கம் பதவியில் இருந்ததோ அல்லது இருக்கிறதோ அதற்கு எதிராக ஜெனிவாக் கூட்டத்திற்குப் பின்னர் சுமந்திரன் கடந்த காலத்தைவிட அதிகம் குரல் கொடுப்பவராக இருந்தார். வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன முந்தைய ராஜபக்ஸ அரசாங்கம் செய்தததைப் போல பிரேரணை 30ஃ1 ல் உள்ள விடயங்களையும் மற்றும் நியாயங்களையும் போட்டிக்கு உட்படுத்தியபோது, – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வெளியில் இருந்துகொண்டு கொள்கைப்படி சுமந்திரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கத்துக்கு எதிரான வாதங்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

எனினும் அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வோம் என்கிற சுமந்திரனின் அச்சுறுத்தல் ஏற்கனவே சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சுட்டிக் காட்டியுள்ளபடி ரணில் தலைமையிலான அரசாங்கம் நாட்டிற்கு விரோதமான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
இது இந்த அரசாங்கத்துக்கு முன்பிருந்த அரசாங்கங்கள் யாவும் பின்பற்றி வந்த ஒருவகை பாதுகாப்பு வரிசையாகும்.

எஸ்.ஜே.வி கூட இழந்தபோது

எஸ்.ஜே.வி

சுமந்திரனது கதையும் கூட யுத்தத்துக்குப் பின்னான தமிழ் மிதவாத அரசியலின் கதைதான். யுத்தத்துக்கு முன்பு கூட அது அப்படித்தான் இருந்தது. தமிழர்களின் உயர்ந்த தலைவரான காலஞ்சென்ற எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் காலத்திலும், பின்னர் எழுபதுகளில் எழுச்சி பெற்ற தமிழ் போராளி இளைஞர் குழக்களும் இழப்பைச் சந்தித்துள்ளன. அதற்குப் பின் திரும்பவும் தமிழ் அரசியல் அதேமாதிரி இருந்ததில்லை.

தமிழ் இளைஞர்களின் போர்க்குணத்தை நடுநிலையாக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் எஸ்.ஜே.வி யின் தலைமுறையினருக்குச் சொந்தமானதா – அது தமிழருக்கு தனியான தாயகத்தை கோரும் தீர்மானம்? இந்தக் கேள்விக்குப் பதில் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அந்தக் கோரிக்கை அப்போது இளைஞர் குழுக்களுடையதாக இருந்தது அது அந்த நேரத்தில் எண்ணிக்கையில் அதிகமானதாகவும் மற்றும் சாதியை மையப்படுத்தியதாகவும் இருந்தது.

மூன்று தசாப்தங்களாக தமிழ் அரசியலில் மற்றும் சமூகத்தில் எல்.ரீ.ரீ.ஈ இனது ஆதிக்கம் உச்சியில் இருந்தபோதும்கூட, மிதவாத அரசியல் மீந்திருந்தது, அவர்களது கோரிக்கைகள் போர்க்குணமிக்க பயங்கரவாத அமைப்புகளின் கோரிக்கைக்கு சமமாகவே இருந்தன. அதை நிறைவேற்றும் பகுதியில் மட்டுமே அவர்கள் வேறுபட்டனர்.எல்.ரீ.ரீ.ஈ அதை பலவந்தமாக அடைய விரும்பியது, ஆனால் அந்த அமைப்புகளை உருவாகக் காரணமாக இருந்த மிதவாத ரி.என்.ஏ, அரசியலமைப்பு வழியாக ஜனநாயக முறைப்படி அடையமுடியும் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருந்தது.

யுத்தத்துக்குப் பின்னர், பிளவுபட்டதுக்கு பின்னரான ரி.என்.ஏ இப்போது செயல் முறைகள் என்கிற பிரச்சினையில் மீண்டும் பிளவுபட்டுள்ளது. ஆர். சம்பந்தனின் கீழுள்ள பிரதான ரி.என்.ஏ அரசியலமைப்பு மூலமாக ஐக்கியமான ஸ்ரீலங்கா என்று; தொடர்ந்தும் சத்தியம் செய்கிறது. முன்னாள் வடக்கு மாகாணசபை முதலமைச்சரும் மற்றும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழு உட்பட பிளவுபட்ட ஏனைய குழுக்கள் ஆணித்தரமாக அதை மறுக்கின்றன.

ஆனால் எல்.ரீ.ரீ.ஈ இனது வெளியேற்றத்தின்பின், எந்தவிதமான தமிழ் போர்க்குணத்தின் ஆரம்பகால புத்துயிர்ப்பின் தோற்றம் நீண்டகாலமாக கண்ணில் படவில்லை அது வருவதற்கு மிக் நீண்ட காலமாகும், ரி.என்.ஏ க்கு விரோதமான தெளிவான செயல்முறை அதேபோல தமிழ் அரசியல் காரணம் என்று எதுவும் இல்லை. அவர்கள் மற்ற இனத்தவரைப்போல அதே ஸ்ரீலங்கா தேசம் என்கிற கூரையின் கீழ் வாழ முடியாது என்பதை அடையாளப்படுத்துகின்றனர். ஆனால் அதை வெளியே தெரிவிக்க அவர்களுக்கு விருப்பம் இல்லாமலோ அல்லது இயலாமலோ உள்ளது. அல்லது தமிழ் மக்களைச் சமாதானப்படுத்துவதற்கு ஏற்று ஒத்திசைவான மூலோபாயம் அவர்களிடம் இல்லை.

ஸ்ரீலங்கா அரசாங்கத்திலும் அதிகமாக, சிங்களப் பெரும்பான்மை மற்றும் சர்வதேச சமூகம் நம்புவது வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழர்களுக்கு அதிகமான போர்க்குணம் தோன்றுவதற்கான உளநிலையோ அல்லது உடல்நிலையோ இப்போது கிடையாது மற்றும் அது எப்போதுமே சாத்தியமில்லை என்று. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அவர்களின் புலம்பெயர் உறவுகளின் பணம் மட்டுமே ஆனால் மேற்கத்தைய தேசங்களில் சொகுசாக வாழும் புலம்பெயர்ந்தவர்கள் அவர்கள்மீது தொடர்ந்து சுமத்த விரும்பும் துயரங்களை அல்ல.

சமநிலையான செயல்

ஜி.ஜி.பொன்னம்பலம்

அப்போதைக்கும் மற்ம் இப்போதைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். எஸ்.ஜே.விக்கு முன்னர் ஜி.ஜி.பொன்னம்பலம் மற்றும் கூட்டத்தினரின் ஸ்ரீலங்காத் தமிழ் தலைமைகள், அரசாங்கத்திலும் மற்றும் வெளியிலுமுள்ள தனித்துவமான சிங்கள ஐ.தே.க வினருடன் சுதந்திரமாகக் கூடிவாழ்ந்தார்கள். எஸ்.ஜே.வி தனது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கீழ் தமிழ் அரசியலை அரசாங்கத்துக்கும் மற்றும் பெரும்பான்மை சமூகத்துக்கு வெளியிலும் கொண்டு வந்தார். முன்னவரின் செயலுக்கு போதுமான நியாயம் இருக்கவில்லை, அதுவே பின்னவரின் செயற்பாட்டுக்கு பங்களிப்புச் செய்யும் ஒரு காரணியாக இருந்திருக்கலாம்.

எப்படியாயினும் இந்த நேரத்தில் தமிழர் உணர்வுகளின் ஆழத்தில் தோன்றிய தனிமைப் படுத்தலுக்கான காரணங்கள் சிங்களம் மட்டும் சட்டம், மறந்துபோய்விட்ட தரப்படுத்தல் மற்றும் ஆரம்ப வருடங்களில் கசப்பான வடிவத்திலான தமிழ் போராளிகளைக் கடினமாகக் கையாண்ட செய்கை என்பனவாகும். தற்போதைய தலைமுறையினர் பூசா முகாம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கக்கூட மாட்டார்கள், பாதுகாப்பு படையினர் அங்கு வைத்து போராளிகள் மற்றும் போராளிகள் எனச் சந்தேகிக்கப் படுபவர்களை – அவர்கள் அனைவரும் அவர்களின் பெற்றோர்களின் தலைமுறை தொட்டு எல்.ரீ.ரீ.ஈ இனது கரங்களைச் சென்றடைவதற்கு காத்திருப்பவர்கள் எனக்கூறி அவர்களை (முரட்டுத்தனமாகக்) கையாண்டார்கள்.

தற்கால ரி.என்.ஏ யினது முயற்சிகள், சிங்கள சமூகத்துடன் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரிவினர் ஊடாக ஒரு அரசியல் பாலம் அமைப்பதே ஆகும், கடந்த நான்கு ஆண்டுகளாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மூலமாக தங்களால் இயன்றவரை முற்சித்து வருகிறார்கள் ஆனால் அதற்கான பதில் ஒரு கலவையாகவே இருக்கிறது, அவர்கள் ஒரு தெரிவை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கவில்லை ஆனால் அவர்களின் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர்கள் அதனைச் செய்தார்கள்.

இருந்தும் சிங்கள அரசியல்வாதிகளுடன் அவர்கள் புரிந்து கொண்ட விதத்தில் காரியங்களை நடத்த அவர்கள் தயாராக இருந்தார்கள் கிடைக்கக்கூடிய இரண்டில் ஒன்றை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். எனினும் முன்னாள் ராஜபக்ஸ ஆட்சிக்கு எதிரான அவர்களது தற்போதைய வாதங்கள் அவருக்கு சவால் விடுவதாகவே உள்ளன, அதாவது அதே தலைமையுடன் சேர்ந்து சாத்தியமான வகையில் போருக்குப் பிந்தைய பணியை தாங்கள் செய்ததாகக் கருதுகிறார்கள். அவர்களது வெறுப்பு சர்வதேச தலையீட்டின் பின்னர் அதிகரிக்கலாயிற்று, அது மீண்டும் புலம்பெயாந்தவர்கள் மூலமாக தமிழ் மக்களிடையே செல்வாக்கு செலுத்தியது.

இன்று ரி.என்.ஏ தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவே உணருகிறார்கள் அதற்காக அவர்களையும் கூட குற்றம் சொல்லத்தான் வேண்டும். ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்த ராஜபக்ஸ போட்டியிட்டாலும் அவரைத் தோற்கடிக்க முடியும் எனப் பிரகடனப் படுத்தியுள்ளார். அது எப்போதும் அவர்களின் கைகளில் இல்லை. குறிப்பாக ரணில் மற்றும் அவரது ஐதேக ஆகியவற்றால், யுத்தக் குற்ற விசாரணை அல்லது அரசியல் தீர்வு போன்ற உணர்வுபூர்வமான விடயங்களில் அவர்களது சொந்த பெரும்பான்மை சிங்களவர்களை விட்டு விலக முடியாது மற்றும் இருப்பினும் தமிழ் வாக்குகள் மட்டும் அவர்களுக்கு கிடைக்கலாம் என நம்புகிறார்கள்.

இன்று ரி.என்.ஏ அவர்களது சக தமிழ் கூட்டணியினர் மற்றும் அவர்களது எதிரிகள் எல்லாரையும் சேர்த்து ஒரு வரைவுக் குழுவுக்குச் செல்லவேண்டும். பொதுவாக கட்சியும் சம்பந்தனின் தலைமையும் பொதுவாக அதே முயற்சியை யுத்தத்துக்குப் பின்பு அதற்காக முயற்சி செய்தார்கள், ஆனால் தோல்வியடைந்தார்கள், ஏனென்றால் சில சுயநலவாத, குறுகிய நோக்கமுள்ள, ஆதரவற்ற தலைவர்கள் ரி.என்.ஏயினை விட்டுவிலகிச் சென்றார்கள். இந்தவகையான சமநிலைச் செயற்பாடு ரி.என்ஏ தக்கவைக்கவிருந்த செயற்பாட்டுக்கு உதவவில்லை – சமூகத்தின் மீதூன பெரியளவு ஆர்வம் மற்றும் சமுகத்துக்கு தேவையானதை அடையச் செல்லவேண்டிய சாத்தியமான பாதையைத் தெரிவு செய்தல் என்பன மட்டுமே அதற்கு உதவும்.

சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆரம்பாட்டப் பேரணியில் விக்னேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் பங்குபற்றியதின் பின்னர் அவர்கள் நன்றாக ஆரம்பித்திரக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ஆனால் ரி.என்.ஏ, மோதல் அல்லது சர்ச்சையில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரையும் சமாதானப் படுத்துவதற்கான முயற்சியை அல்லது ஆதரவை தொடர்ந்து செய்ய முடியாது. அவர்கள் ஆழமானதும் ஆர்வமானதுமான சில முயற்சிகளில் ஈடுபட வேண்டும், ஆனால் அதற்கான நேரம் அவர்கள் பக்கத்தில் இல்லை – ஏனென்றால் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மற்றும் மாகாணசபை தேர்தல் என்பன இப்போது முதல் எந்த நேரத்திலும் நடைபெறத் தயாராக உள்ளன, விரைவிலேயே கடைசியாக உள்ளது நடக்கலாம் ஆனால் நிச்சயமாக மற்ற இரண்டும் அவற்றின் நேரம் வரும்போது நடக்கும்.

(இந்த எழுத்தாளர் புது தில்லியை மையமாகக் கொண்ட பல்வகை ஒழுங்கு முறை இந்திய பொதுக் கொள்கை சிந்தனையாளர்களான ஒவ்சேவர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் சென்னைக் கிளையின் பணிப்பாளர் ஆவார்.)

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Share:

Author: theneeweb