தர்மபுரம் பிரதேச வைத்தியசாலை நீர் இன்றி நெருக்கடி 12 ஆயிரம் லீற்றர் நீரை இராணுவம் விநியோகித்தது

தர்மபுரம் பிரதேச வைத்தியசாலை நீர் இன்றி நெருக்கடி 12 ஆயிரம் லீற்றர் நீரை இராணுவம் விநியோகித்தது

கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் நீர் இன்மையால் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிணற்றில் நீர் வற்றியதன் காரணமாக வைத்தியசாலை தங்கியுள்ள நோயாளிகள் முதல் வைத்தியசாலையின் ஏனைய தேவைகளுக்கு பொது மக்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட பலரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு கரைச்சி பிரதேச சபையிடம் வைத்தியசாலைக்கான நீரை வழங்குமாறு கோரிக்கை விடுத்த போதும் அவர்கள் ஒரு லீற்றர் நீருக்கு ஒரு ரூபா கோரியதாகவும் அதனை வைத்தியசாலையினால் வழங்க முடியாத நிலையில் வைத்தியசாலை இராணுவத்தின் உதவியை நாடியது. இதனை தொடர்ந்து படையினர் இயக்கச்சியிலிருந்து 12 ஆயிரம் லீற்றர் நீரை விநியோகித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிவரும் 12 ஆம் திகதி சிறுபோக நெற்செய்கைக்காக கல்மடுகுளம் திறக்கப்படும் வரை நீர்ப்பற்றாக்குறை நிலவும் எனவும் கல்மடுகுளம் திறக்கப்படும் போது வைத்தியசாலையின் கிணற்றில் நீர் நிரம்பிவிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Author: theneeweb