யாழில் 200 மில்லியன் ரூபா நிதியில் உப்பளம் உற்பத்தி நீரேற்றும் நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் 200 மில்லியன் ரூபா நிதியில் உப்பளம் உற்பத்தி நீரேற்றும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக இன்று (08) ஆரம்பிக்கப்பட்டது.

சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் கந்தைய வாமதேவன் தலைமையில் இன்று (08) காலை 8 மணியளவில் உப்பளத்திற்கு நீரேற்றும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளிப் பகுதியில் உப்பு உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, உப்பு உற்பத்தி நீரேற்றி வைக்கப்பட்டது.

தனங்கிளப்பு அறுகுவெளிப் பகுதியில் சுமார் 100 ஏக்கர் காணியில் லண்டன் முதலீட்டாளர் கந்தையா பிரேமதாஸ் மற்றும் ஆனந்தா உப்பு உற்பத்தி நிறுவனமும் இணைந்து, சகாதேவன் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வி.சகாதேவனின் ஆலோசனையில் கீழ் உருவாக்கப்பட்ட இந்த உப்பள உற்பத்தி நிறுவத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக 100 மில்லியன் ரூபா முதலீட்டில் இந்த உப்பு உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 வருட யுத்தத்தின் போது வடமாகணத்தில் காணப்பட்ட தொழிற்சாலைகள் அழிவடைந்த பின்னர் இளைஞர்கள் வேலைவாய்ப்பற்ற நிலையில் காணப்படுகின்றார்கள்.

இவ்வாறான நிலையில், வடமாகாணத்தில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் அண்மையில் லண்டன் வாழ் முதலீட்டாளர் பிரேம்தாஸ் 200 மில்லியன் ரூபா நிதியில் முதலீடு செய்துள்ளார். இந்த முதலீட்டின் அடிப்படையில் முதற்கட்டமாக 100 மில்லியன் ரூபா நிதி முதலீடு செய்யப்பட்டு உப்பு உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb