வாகன சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுக்கான விசேட அறிவித்தல்

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வாகனங்களில் ஒலி மாசு ஏற்படும் வகையில் அதிக சத்தம் கொண்ட ஒலி சமிக்ஞை (horn) மற்றும் அலங்கரிக்கப்பட்ட மின்குமிழ்களை பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

அதுவரை இந்த ஒலி சமிக்ஞை மற்றும் அலங்கரிக்கப்பட்ட மின்குமிழ்களை அகற்றுவதற்கான கால அவகசாம் வழங்கப்பட்டுள்ளது.

அதிக சத்தத்துடன் கூடிய ஒலி சமிக்ஞைகளை அகற்றுமாறு அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காவல்துறைக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb