சிறைக் கைதியிடம் சைனட் குப்பிகள்…

வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரால சுரங்க என அறியப்படும் சமன் புஸ்பகுமாரவிடம் இருந்து சைனட் குப்பிகளும், ஊசி முசலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

மேல் மாகாண புலனாய்வு பிரிவிற்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றில் அடிப்படையில் இந்த பொருட்கள் மீட்கப்பட்டதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அவரிடம் இருந்து இரண்டு சைனட் குப்பிகளும், 2 ஊசி முசலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இவை கொலை செய்யும் நோக்கில் சிறைக்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb