சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பில் விக்னேஸ்வரனை விவாதத்திற்கு அழைத்துள்ள தவராசா

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பில் நேரடி விவாதத்திற்கு வருமாறு முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, முன்னாள் வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சரினால், விவாதத்திற்கு வரமுடியாவிட்டால், அவரின் பிரதிநிதியை அனுப்புமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே முன்னாள் வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா விவாதத்திற்கான அழைப்பை விடுத்துள்ளார்.

Share:

Author: theneeweb