மன்னார், வவுனியாவில் கடும் வறட்சி: குளங்கள், கிணறுகளில் நீர் வற்றியது

நிலவும் வறட்சியுடனான வானிலை காரணமாக சுமார் 467,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் – மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தட்சணா மருதமடு கிராம மக்கள் வறட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில் 33.2 பாகை செல்சியஸ் வெப்பம் இன்று பதிவாகியது.

விவசாயத்தை ஜீவனோபாயமாகக் கொண்ட 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன.

குளங்கள் மற்றும் கிணறுகளில் நீர் வற்றியுள்ள நிலையில், விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பயிர்ச்செய்கைகளுக்கும் இதனால் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியாவில் 37.8 பாகை செல்சியஸ் வெப்பம் இன்று பதிவாகியது.

நிலவும் வறட்சியினால் பாரிய நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பயிர்கள் கருகியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

Share:

Author: theneeweb