யாழ்நகரில் ஆறு நூல்களின் அறிமுகநிகழ்வும் கருத்தரங்கும்;;..!

யாழ்ப்பாணம் பொதுசனநூல்நிலையக் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 6-ம் திகதி (06 – 01 – 2019) ஞாயிறு பிற்பகல் 3மணிக்கு ஆறு நூல்களின் அறிமுகநிகழ்வும் கருத்தரங்கொன்றும் இடம்பெறவுள்ளன.

இருஅமர்வாக இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் ,முதல் அமர்வாக ஆறு நூல்களின் அறிமுகநிகழ்வு பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கொழும்புமாநகரசபைஉறுப்பினர் எஸ். பாஸ்கரா வாழ்த்துரை வழங்குவார்.
கவிஞர் கருணாகரன், தி. சிறிதரன் (சுகு),கலாநிதிமனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் நூல் அறிமுகவுரைகளை வழங்குவர்.

பிரான்ஸ் நாட்டில் வதியும் மூத்தஎழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் ஈழத்துமண் மறவாமனிதர்கள|;, என்வழிதனிவழிஅல்ல…|, ஒளிக்கீற்று| ஆகியநூல்களும், பத்மா இளங்கோவனின் செந்தமிழ் குழந்தைப் பாடல்கள|;, சந்தமிழ் பாப்பாப் பாடல்கள|; ஆகியநூல்களும் பாரதிநேசன்| வீ.சின்னத்தம்பியின் ஈழத்தின் வடபுலத்தில் கம்யூனிஸ இயக்கத்தின் வளர்ச்சியில் தமிழ்ப் பெண்கள்| என்றநூலும் இந்த அறிமுகநிகழ்வில் இடம்பெறவுள்ளன.அண்மையில் தமிழகத்திலும், கொழும்பிலும் இந்நூல்களின் அறிமுகநிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதுஅமர்வாக, தோழர் என். சண்முகதாசன் வழிவந்தசிந்தனைகளும் சமகாலப் பொருத்தப்பாடும்…| என்றபொருளில் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.இலங்கைமுற்போக்குமக்கள் பேரவைத் தலைமைக்குழு உறுப்பினர் எம். ஏ. சி. இக்பால் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில் மூத்தபத்திரிகையாளர் வீ.தனபாலசிங்கம், டபிள்யூ. சோமரட்ணா,சட்டத்தரணி இ. தம்பையாஆகியோர் கருத்துரைவழங்குவர்இலங்கைமுற்போக்குமக்கள் பேரவைஆதரவில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

Share:

Author: theneeweb