யாழ். பல்கலைக்கழக துண்டுபிரசுரத்துடன் ஆவா குழுவுக்கு தொடர்பு?

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையை நிறுத்துமாறு அறிவித்து அந்த பல்கலைக்கழ வளாகத்தில் துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஆவா குழு என்ற பெயரில் துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இல்லாத பகிடிவதை இப்போது இடம்பெறுவதற்கான காரணங்கள் என்ன? என்று அந்த துண்டுபிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.

பகிடிவதை வழங்குகின்ற மாணவர்கள் ஆவா குழுவால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அந்த துண்டுபிரசுரத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தமது குழுவுக்கு இந்த துண்டுப் பிரசுத்துடன் எவ்வித தொடர்பும் இல்லை என்று அத தெரணவிடம் அருன் சித்தார்தன் கூறினார்.

ஆவா என்ற பெயரை பயன்படுத்தி பல்கலைக்கழகத்தில் வேறு அரசியலர் குழுவொன்று இவ்வாறு செயற்படுவதாக அவர் கூறினார்.

Share:

Author: theneeweb