8 நாள்களில் ரூ. 100 கோடி வசூல்: மோகன்லால் படம் புதிய சாதனை!

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், விவேக் ஓப்ராய் நடித்த லுசிஃபர் படம் 8 நாள்களில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை செய்துள்ளது.

இந்தத் தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமான படமே வசூலில் சாதனை படைத்துள்ளது. லுசிஃபருக்கு முன்பு வேறெந்த மலையாளப் படமும் 8 நாள்களில் ரூ. 100 கோடியை வசூலித்தது கிடையாது. ரூ. 100 கோடி வசூலைப் பெற்றுள்ள 2-வது மோகன்லால் படம் இது. 2016-ல் மோகன்லால் நடித்த புலி முருகன் படம் ரூ. 100 கோடி வசூலித்து, இந்த இலக்கை எட்டிய முதல் மலையாளப் படம் என்கிற புதிய சாதனையைப் படைத்தது.

Share:

Author: theneeweb