தனியார் பேரூந்து நடத்துனர் மீது தாக்குதல்

 

பதுளை – கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்துகள் இரண்டின் ஊழியர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடத்துனரொருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேரூந்து பதுளையில் இருந்து கொழும்பு வரை பயணித்துக்கொண்டிருந்த போது எல்ல , மில்லகமவில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான நடத்துனர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எல்ல காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் பேரூந்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.

 

 

 

Share:

Author: theneeweb