தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்த 2821 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது 2821 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மனித நுகர்வுக்கு தகுதியற்ற முறையில் உணவுப் பண்டங்களை தயாரித்த 21 வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய கூறினார்.

இது தவிர மேலும் 616 நிறுவனங்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மகேந்திர பாலசூரிய கூறினார்.

சிங்கள தமிழ் புத்தாண்டை காலத்தை முன்னிட்டு 2700 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இரண்டு வார காலம் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Share:

Author: theneeweb