புத்தாண்டில் நீர் துண்டிப்பு இல்லை

நாட்டின் பல பகுதிகளில் வறட்சி நிலவினாலும் தொடர்ந்து நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்று வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகரங்களில் வாழும் பெரும்பாலான குடும்பங்கள் தற்போது தமது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் நகர்புற பகுதிகளில் பயன்படுத்தும் நீரின் அளவு குறைவடைந்துள்ளதாக அதன் தலைவர் ஏ.அன்சார் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

இதனுடன் களுகங்கையில் கடல் நீர் கலந்துள்ளதால் கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து விநியோகிக்கப்படும் நீரை தொடர்ந்தும் பருகுவதற்கு பயன்படுத்த வேண்டாம் என தேசிய நீர்வழங்கல் மற்று வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கோரியுள்ளார்.

Share:

Author: theneeweb