மோடி மீண்டும் பிரதமராக இம்ரான்கான் ஆசைப்படுவது ஏன்?- புதிய தகவல்கள்

மோடி மீண்டும் பிரதமராக இம்ரான்கான் ஆசைப்படுவது ஏன் என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
வெளிநாட்டை  சேர்ந்த சில பத்திரிகையாளர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேட்டி அளித்தார். அப்போது  இந்தியாவில் மீண்டும் மோடி ஆட்சி அமைத்தால் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியும்’என கூறினார். ஏன் அவர் அவ்வாறு கூறினார் என் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் ஆட்சி செய்யும் இம்ரான்கானின் அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சர்வதேச நிதியகம் பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதி உதவியை நிறுத்தி விட்டது. பயங்கரவாதிகள் பிரச்சினையால் அதிருப்தி ஆன அமெரிக்காவும் நிதி உதவி வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இத்தகைய காரணங்களால் தற்போது பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி உள்ளது.
அதை சமாளிக்க இம்ரான் கான் தனது பாரம்பரிய நட்பு நாடுகளான வளைகுடா நாடுகளிடம் கூடுதல் நிதி உதவியை பெற்றார். இருந்தும் அது போதுமானதாக இல்லை. இதுதவிர அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நட்பு நாடான சீனாவும், பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவிகள் அளித்து வருகிறது.
அத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிடம் இருந்து நிதி உதவி பெற்று அதன் மூலம் பாகிஸ்தான் பொருளாதாரத்தை மேம்படுத்த இம்ரான்கான் விரும்புகிறார். அதற்காகவே அண்டை நாடான இந்திய பிரதமர் மோடியை பாராட்டி புகழ்ந்ததாக தெரிகிறது.
பாகிஸ்தானில் பிப்ரவரி மாத அன்னிய செலாவணி கையிருப்பு 8 பில்லியன் டாலராக இருந்தது. அது 2 மாதங்களுக்கான இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு 12 பில்லியன் டாலர் இருந்தது.
Share:

Author: theneeweb