பிரான்ஸ் படவிழாவில் பரியேறும் பெருமாள்

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகும் வெளிநாடுகளில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.

பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுவரும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் திரைப்பட திருவிழாவில் திரையிடப்படுகிறது.

புதிய படங்கள் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே இந்த விழாவில் படங்கள் திரையிடுவது வழக்கம். ஆனால் பரியேறும் பெருமாள் படம் வெளியாகி பல மாதங்களுக்குப்பிறகு இவ்விழாவில் திரையிடப்படுவது மகிழ்ச்சியை தருகிறது என்கிறார் இயக்குனர் மாரிசெல்வராஜ்.

Share:

Author: theneeweb